அடியெடுத்துவைக்கும் ஆலயத்து வாசலிலே
பசியால் வதங்குகிறது ஒரு பிள்ளை,
தாண்டிப்போய் கருவறையில் கல்லிலே
இறைவனை தேடுகிறது ஒரு கூட்டம்,
எதுவுமே தெரியாமல் தேரிலே
முதுகை உரசுகிறது ஒரு மாடு,
நடக்கும் தெருவின் ஓரத்திலே
விபத்தில் மாழ்கிறது ஒரு உயிர்,
உடலிலே கொழுப்பென்று வீதியிலே
பயிற்சிக்காக ஓடுகிறது ஒரு உருவம்,
தேவனின் சிலுவையின் முன்னாலே
பாவமன்னிப்பு கேட்கிறது ஒரு ஜீவன்,
மதிய வெயிலின் கொடுமையிலே
கூலிக்காய் உழைக்கிறது ஒரு மனிதம்,
வெளியில் வேர்க்கிறதென்று A/Cயிலே
நிற்பதற்காய் பரபரக்கிறது ஒரு திலகம்,
நிறைந்த போதையின் மயக்கத்திலே
தள்ளாடி நடக்கிறது ஒரு ஜடம்,
கட்டிய துணையிருக்க ஊரிலே
எங்கெங்கோ அலைபாய்கிறது ஒரு மிருகம்,
தனது கோபத்தின் விரக்தியிலே
மனைவியை உதைக்கிறது ஒரு அறிவிலி,
தன்மேல் இல்லாத நம்பிக்கையாலே
கட்டியவளை சந்தேகிக்கிறது ஒரு முட்டாள்,
கட்டிய கணவன் உதைக்கையிலே
காலடியில் கெஞ்சுகிறது ஒரு பேதை,
ஆயிரம் கனவுகள் உள்ளத்திலே
தூக்கத்தில் சிரிக்கிறது ஒரு மழலை,
இலட்ச ரூபாய் செலவிலே
சந்தனத்தில் வேகிறது ஒரு பிணம்,
பிச்சை எடுத்து செத்ததாலே
தேடுவாரற்று கிடக்கிறது ஒரு உடல்,
சிறுநீரகம் செயல் இழந்ததாலே
இரவல்கேட்கிறது ஒரு உள்ளம்,
இதயத்தில் ஓட்டை விழுந்ததாலே
உதவிகள் கோருகிறது ஒரு சிறுபூ,
அர்த்த சாம நிலவினிலே
காதலால் தவிக்கிறது ஒரு பெண்மை,
காதல் என்ற பெயரினிலே
எல்லைமீறி தழுவுகிறது ஒரு ஆண்மை,
நாகரிக மோகம் மிகுந்ததாலே
நாகரிக மோகம் மிகுந்ததாலே
மொழிமாறி தடக்குகிறது ஒரு சிகரம்,
ஈன்ற அந்த பொழுதினிலே
மழலையை தனிக்கவிட்டுப்போகிறது ஒரு தாய்மை,
இத்தனையையும் பார்க்கையிலே
புரிகிறதெனக்கு,
இறைவன் ஏன் கல்லானாரென்பது...
No comments:
Post a Comment