"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, March 4, 2011

மீள் மாற்றம் (Remix) -3

புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.

(தாய் மண்ணை பிரிந்தவனின் உணர்வுகள் வரிகளாக...)

அழகான என் நாடு, நான் பிறந்த தாய் நாடு,
எந்நாளுமே மறக்காதம்மா
அது போல ஒரு வாழ்வு, இதமான சுக வாழ்வு
எந்நாட்டிலும் கிடைக்காதம்மா
அன்னை மண்ணை மறக்கவில்ல, என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்,
ஒரு நாளில் நான் வந்து தடம் பதிப்பேன்,

அழகான என் நாடு, நான் பிறந்த தாய் நாடு,
எந்நாளுமே மறக்காதம்மா
அது போல ஒரு வாழ்வு, இதமான சுக வாழ்வு
எந்நாட்டிலும் கிடைக்காதம்மா
ஊரை விட்டு நான் பிரிந்தும் உறவை விட்டு தூர வந்தும்
என் நினைவெல்லாம் தாய் மண்ணின் மேல்தானம்மா,
சுக போகம் நிறைந்திருக்கு, பணமெல்லாம் சேர்ந்திருக்கு,
ஆனாலும் தாய் மண்ணின் சுகம் இல்லைம்மா,
நான் பிறந்த மண்ணை விட்டு,
நான் படித்த பள்ளியை விட்டு,
வந்து நான் படு வேதனை கொஞ்சமில்ல,
அது தீரும் நாளும்தான் தெரியவில்ல,

அழகான என் நாடு, நான் பிறந்த தாய் நாடு,
எந்நாளுமே மறக்காதம்மா
அது போல ஒரு வாழ்வு, இதமான சுக வாழ்வு
எந்நாட்டிலும் கிடைக்காதம்மா

உறவெல்லாம் ஊரிலே, பார்க்கவும் முடியல்லே,
என் நெஞ்சு எப்போதும் தவிக்குதம்மா
யார் செய்த பாவமோ? ஏனிந்த துயரமோ?
என் வாழ்வில் விடியல்தான் எப்போதம்மா?
அன்னை மண்ணை பார்க்கணும் நான், 
குயில்கள் பாட கேக்கணும் நான்,
என் ஆசை நிறைவேறும் அந்நாளுமே
விரைவினில் வந்திட வேணுமம்மா 

அழகான என் நாடு, நான் பிறந்த தாய் நாடு,
எந்நாளுமே மறக்காதம்மா
அது போல ஒரு வாழ்வு, இதமான சுக வாழ்வு

எந்நாட்டிலும் கிடைக்காதம்மா

அன்னை மண்ணை மறக்கவில்ல, என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்,
ஒரு நாளில் நான் வந்து தடம் பதிப்பேன்,

அழகான என் நாடு, நான் பிறந்த தாய் நாடு,
எந்நாளுமே மறக்காதம்மா

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம் 


செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும்
என்பாட்டுன்னா சந்தோசம்தான்
என் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என்பாட்டுன்னா சந்தோசம்தான்

அம்மாடி உன் கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிற்கும்,
அன்பே உன் பெயர் சொல்ல கவிதை கொட்டும்


செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் 
என்பாட்டுன்னா சந்தோசம்தான் 
என் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என்பாட்டுன்னா சந்தோசம்தான்


இருவெள்ளி கொலுசாட இசை பாட்டு நான் பாட 
கைதட்டும் பூந்தோட்டம் அதைக்கேட்டுத்தான்,
மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட 
இலை கூட தலையாட்டும் நான் பாடினா,
நெற்றியில சூரியனை ஆற வச்சு போட்டு வைப்பேன் 
மருதாணியில் மகராணியை போர்த்தி வைப்பேன்
மலரே உன் முன்னால தனியா நிற்பேன் 

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் 
என்பாட்டுன்னா சந்தோசம்தான் 
என் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என்பாட்டுன்னா சந்தோசம்தான்

மனசெல்லாம் மாக்கோலம், நீ போட்ட பூக்கோலம்,
மழை தண்ணி பட்டாலும் அழியாதம்மா,
நாளெல்லாம் என்கூட நீ பேசி சிரிச்சாலே 
அதுபோல சுகம் ஏதும் கிடையாதம்மா,
கண்ணாடியும் உன்முகத்தை கண்ணாடியா பார்ர்க்கும் கண்ணே,
என்பாட்டு சொல்லாத தென்றல் சொல்லும் 
என் உசிரோட உன் பேச்சு மொழியா நிற்கும்,


செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் 
என்பாட்டுன்னா சந்தோசம்தான் 
என் மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
என்பாட்டுன்னா சந்தோசம்தான்

அம்மாடி உன் கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிற்கும்,
அன்பே உன் பெயர் சொல்ல கவிதை கொட்டும்

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் 
என்பாட்டுன்னா சந்தோசம்தான்

ஒலி, ஒளி வடிவம்


  






This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment