"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, April 23, 2011

எது தேவை?



உணவின்றி தவித்ததனால்
மருந்தின்றி உயிர் பிரிந்ததனால்

மனங்கள் மரத்ததனால்
இதயங்கள் கனத்ததனால்

உயிரிருந்தும் பிணங்களாக
உணர்விருந்தும் மரங்களாக

ஒதுங்கவும் நிழலின்றி
இருக்கவும் வீடின்றி

முட்களில் நடந்து வேதனைப்பட்டவர்
இருக்க இடமின்றி தெருவில் நின்றவர்

விதியை நோவதா?
சதியை எண்ணுவதா?

எதுவும் புரியாமல்
நடப்பதுவும் தெரியாமல்

மயங்கிய மக்கள் நிம்மதி தேடியிங்கே
மறந்தவர் பலர் மாய வலைகளுடன்

இணையத்தில் இணையற்ற வித்தைகள்
இனமிங்குபடுவது பலவகை துன்பங்கள் 

பாமரமக்களுக்கு புரியாத நடப்புகள்
பாடுகிறார்கள் விதம் விதமாய் விடுப்புகள்

எழுத்திலே சிலிர்க்கிறது வீரம்
படிக்க புல்லரிக்கிறது தேகம்

ஓ, வலிக்கிறது பழைய காயம்
கனக்கிறது இன்னும் இதயம்

தேவையிப்போ பசிக்குணவு
உறங்கியெழுந்திட குடில்

பிள்ளைகளுக்கொரு எதிர்காலம்
தன்னிறைவான வாழ்வாதாரம்

வீரப்பேச்சுகள் பசியைப்போக்காது
உணர்வெழுத்துகள் நிழலையும் தராது

ஏசிக்குளிரில் ஆயிரம் எழுதலாம்
கடல்கடந்திருந்து பலதும் சொல்லலாம்

விழுந்த பலர் எழும்பவேயில்லை
எழும்பி நடக்க சக்தியுமில்லை

அவர்களுக்கு உதவ எவருமில்லை
உதவிகள் செய்ய நினைக்கவுமில்லை

எழுச்சி வரிகளை பின்பு பேசுங்கள்
உதவிக்கரங்களை முதலில் நீட்டுங்கள்

விழுந்துகிடப்பவனுக்கு சொற்பொழிவு தேவையில்லை
வீரமகனை அரவணைக்க ஒருகைதான் வேண்டும்

பட்டவனுக்குத்தான் அதன்வலி தெரியும்
பார்திருப்பவனுக்கு காட்சிதான் தெரியும்

உணர்வுள்ளவன் மௌனமாய் இருக்கிறான்
நிகழ்வினையெண்ணி மனதுக்குள் வேகிறான்,

சிலர் உடல்களைகூட வேகவைக்கிறார்
பலர் துயரழுத்த பார்த்துநிற்கிறார்

மக்களின் நிலையை மறந்திட்ட சிலர்
பேசும் வார்த்தைகள் பெரும் இடர்

மக்களின் மீட்சிக்கு தடையான அடி
கம்பிக்குள் வாழ்பவர்களிற்கு நிரந்தர இடி

சாதனைகள் பல செய்வதாக எண்ணி
செய்யும் செயலோ எமக்கான கண்ணி

வீரமொன்றும் எழுத்தில் வேண்டாம்
மக்களுக்கினி சுமையும் வேண்டாம்

பட்டதிலிருந்து எழுந்திடவேண்டும்
மாற்றுவழிகளில் நிமிர்ந்திடவேண்டும்

நிம்மதியான வாழ்வு வேண்டும்
தென்றல்தவழும் தேசம் வேண்டும்

அவற்றினை கொடுக்க வழியினை தேடுங்கள்
வழிதெரியாவிட்டால் அமைதியை பேணுங்கள்

உழைப்பின் பயன் என்றோ கிடைக்கும்
போகம் பிந்தியும் அறுவடை நிகழும்

அவசரமாக அறுக்க நினைத்தால்
அரைவயிற்றுக்குக்கூட சாப்பிட முடியாது

இதை உணர்ந்து நீங்கள் நடந்தால்
வேதனை எமது வாழ்வில் வராது





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Sunday, April 17, 2011

இவர்களையும் பாருங்கள்


இன்று அவசர கதியில் விரையும் இந்த ஆடம்பர உலகில் நாம் பார்க்க மறந்த அல்லது பார்க்க விரும்பாத சில பக்கங்களும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையே. எனது முகநூலில் முகம் தெரியாமலேயே நட்பாகி உறவாகிய சில உறவுகளின் நல் எண்ணத்தினால் அவர்களுக்கு வழங்குவதற்காக சில தகவல்களை பெற முயன்றபோது கிடைத்த தரவுகளால் இதயத்தில் சுமையும் வேதனையும் அழுத்தின. 
                                                  நாம் வாழும் இந்த தமிழ் வளர்த்த மண்ணில் இன்றும் பல சிறார் இல்லங்கள் உதவிகளின்றி கையேந்தும் நிலையில் உள்ளதை பார்க்கும்போது எமது வாழ்வின் அர்த்தங்கள் கூட புரியாமல் போகின்றன. அப்படியானவற்றில் இப்போ அத்தியாவசியமாக உதவிகளை வேண்டி நிற்பது "இனியவாழ்வு இல்லம்" - பார்வை இழந்தவர்கள், கேட்கும் திறன் அற்றவர்கள், பேசமுடியாதவர்கள் என சிறார்களை உள்ளடக்கிய அபூர்வமான இல்லம். மனித நேயம் கலந்த மகத்தான சேவைக்கு இன்னுமொரு சாட்சியாக விளங்கிய இல்லம் இது. 
                          சமூக நலன் கொண்டு 19.09.1997இல் திரு.மாசிலாமணி என்ற விழிப்புலனற்றவரால் இந்த இல்லம் தொடங்கப்பட்டது. கிராமசேவையாளராக இருந்த மாசிலாமணி அவர்கள் தனது சொந்த முயற்சியால் விழிப்புலனற்று, செவிப்புலனற்று, ஆதரவற்று அலைந்த குழந்தைகளை தேடி தனது இல்லத்தில் சேர்த்துவந்தார். ஓலைக்கொட்டில் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு அந்த இல்லத்தை அவர் தொடங்கினார். நாளடைவில் "மாற்று வலுவுள்ள" பிள்ளைகள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலம் என்பவற்றை கருதி இனிய வாழ்வு இல்லத்தில் சேர்ந்துகொண்டார்கள். இந்த பிள்ளைகள், எமது சமூகத்தில் தங்களை அடையாளங்காட்டுவது அல்லது அதன் ஓட்டத்தில் எப்படி இணைத்து செல்வது என்ற உபாயங்களை அவர்கள் இனிய வாழ்வு இல்லத்தில் பெற்றுக் கொள்ளுகிறார்கள். 
                                     இவ்வில்லம் இலங்கையில் வலிந்துதவு சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் கீழ் வடக்கு கிழக்கு சமூக சேவைகள் நலத்துறை திணைக்களம் சார்பாக புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிய மகத்தான இல்லம். இது ஒரு கல்வி நிலையம் மட்டுமல்ல. ஒரு விடுதியும் கூட. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மண்டபங்கள், அலுவலகம் உணவுக்கூடம், கற்கும் மண்டபம்,  பயிர் தோட்டம், இல்லத்தின் அருகிலேயே சிறார்களின் நலனோம்பல் திட்டமாக கிராமியவிற்பனை நிலையம் என எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டு இயங்கிய இந்த இல்லம் இன்று தற்காலிக கொட்டகை அமைக்க கூட வழியின்றி எதிர்காலம் புரியாமல் விழித்து நிற்கிறது.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையுடனும் மனிதநேயம் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் நிறுனவங்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் போன்ற தரப்பினரின் ஆதரவுடனும் சீரும் சிறப்புமாக இயங்கிய காலத்தில் இங்கு கல்விகற்ற, பராமரிக்கப்பட்ட எட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலை கழகத்திற்கு தெரிவாகி இல்லத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தினர். 
                                                                 இங்கு தற்போது இயக்குநராக சேவையாற்றும் திரு.ராஜ்குமார் அவர்கள் யுத்தத்தினால் பார்வை பாதிக்கப்பட்டவர். முன்னர் எறிகணை வீச்சில் ராஜ்குமாரின் தந்தை பலி கொள்ளப்பட்டார். பின்னர் தாயாரும் நோயாளியாக இறந்து போயிருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஒரே பிள்ளையான ராஜ்குமார் ஆதரவற்ற அனாதை சிறுவனாகி விடுகிறார். 5ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு மாடு மேய்க்கும் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மாடு மேய்க்கும் இடத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அவரது இரண்டு கண்களும் காயத்திற்கு உள்ளாகி பார்வை  பாதிக்கப்பட்டு  போய்விட்டது. பார்வை பாதித்து இனிய வாழ்வு இல்லத்திற்கு வந்துசேரும் ராஜ்குமார் அந்த இல்லம் அவருக்கு கொடுத்த நம்பிக்கை செறிந்த கல்வியால் சாதாரண தரம், உயர்தரம் என்று படித்து சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். இப்பொழுது அதன் இயக்குநராகி சிதைந்த இல்லத்தை மீள ஒருங்கிணைக்கவும், சிதறுண்ட பிள்ளைகளை மீள இணைக்கவும் தனது பணிகளை தொடங்கியிருக்கிறார்.
                                         வன்னியில் 2009 போரின்போது  லட்சக்கணக்கானவர்கள் நிலம் பெயர்ந்து அலையத் தொடங்கிய பொழுது தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அதன் இயக்குநரும் அர்ரம்பிதவருமான மாசிலாமணி அவர்களும் நடக்க தொடங்கினார். அப்பொழுது 150 வரையான பிள்ளைகள் இந்த இல்லத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு அலையத்தொடங்கினார்கள். சில பிள்ளைகளின் கண்களுக்கு அங்கு நடந்த கொடுமையான சண்டைகள், இரத்தங்கள், சதைகள் தெரியாமலிருந்தன. எதுவும் தெரியாமல் அவற்றின் கொடுமையான ஓசைகளை கேட்டபடி அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சில பிள்ளைகள் குண்டுகளின் சத்தங்கள், ஷெல்களின் சத்தங்கள், அழுகைகள் என்பனவற்றை கேட்காமல் எந்தச் சத்தமுமில்லாது தங்களுக்கும் முன்னால் நடக்கும் கொடுமைகளை பார்த்தபடி அவற்றுக்கு உள்ளாக்கப்பட்டபடி சென்று கொண்டிருந்தார்கள். 
இதுதான் அவர்களின் உலகம்... 
இதுதான் அவர்களின் வாழ்வு...
                                                            வழியில் காயங்களுக்கும் மரணங்களுக்கும் முகம் கொடுத்தபடி அவர்கள் செல்லுகிறார்கள். அந்த பிள்ளைகளை காத்து வந்த மாசிலாமணி அவர்கள் ஷெல் தாக்குதலினால் பலி கொள்ளப்படுகிறார். பிள்ளைகள் ஆதரவற்று அனாதைகளாகின்றனர். இறுதியில் சமர் மிகத்தீவிரம் அடையும் பொழுது பெற்றோர்களுடன் சில பிள்ளைகளும் தனியாகவே சில பிள்ளைகளுமாக,  பிள்ளைகள் எல்லோரும் சிதறியபடி இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்லுகிறார்கள். 
                                                           இப்பொழுது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மேலும் பாதிப்புக்களுடன் இழப்புக்களுடன் எங்கெங்கோ இருக்கிறார்கள். அவர்களை இணைத்து மீண்டும் இல்லத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போதைய இயக்குநர் ராஜ்குமார் தொடங்கியிருக்கிறார். சில பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். யாரும் இல்லாதவர்களும் இழப்புக்களை சந்தித்தவர்களும் இப்பொழுது கைதடியில் உள்ள இல்லம் ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். அத்துடன் இங்கிருந்த பழைய பிள்ளைகளை மீள இணைக்க  பெற்றோர்கள் தேடி வருகிறார்கள். அவர்களுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இந்த இல்லத்திற்கு புதிதாய் இணைகிறார்கள்.
                                     யுத்தமும் காலமும் இவர்களை பிரித்து இவர்களிடமிருந்த வளங்களை அழித்து விட்டது. இனிய வாழ்வு இல்லப்பிள்ளைகளை காயங்களுக்கு உள்ளாக்கி விட்டது. யாரிடமும் உதவி கேட்காமல் வாழ்ந்திருந்த அவர்களது வாழ்வினை சீரழித்துவிட்டது. மேலும் அங்கங்கள்  பாதித்த பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறது. அந்தப்பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப்பெற்று எதிர்காலத்தை வளம்படுத்த இந்த இல்லம் மீள கட்டமைக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாயிருக்கிறது. இந்த மனிதாபிமான விடயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டியதன் பாரிய பொறுப்பிருக்கிறது.
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் வலிமை எங்களிடமிருப்பதில்லை. 
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் ஒளி எங்களிடமிருப்பதில்லை. 
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் பாடல் எங்களிடமிருப்பதில்லை. 
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் மொழி எங்களிடமிருப்பதில்லை. 
அவர்களின் மௌன மொழி எமக்கு புரியாவிட்டாலும்  அவர்களும் மனிதர்கள்தான் என்பதைக்கூட நாம் உணர முடியாதவர்களல்லவே? அவர்களது உணர்வுகள் எம்முடன் பேசும், எமது உள்ளத்திலும் மனச்சாட்சி சாகதவரை.
இன்று எம் மக்கள் மத்தியில் பல அதீத ஆடம்பர செலவீனங்கள் கௌரவம் என்ற போர்வையில் நடத்தபடுவதை நாம் காண முடிகிறது. இவை வீடுகளில் இடம்பெறும் மங்கல நிகவுகளான பூப்பு நீராட்டு, திருமணம், பிறந்தநாள் போன்றவை தொடக்கம் துயரை வெளிப்படுத்துகின்ற சாவுச்சடங்குகள், பின்பு படையல், எட்டு, முப்பத்தொன்று, ஆண்டுத்திதி என வரையறையின்றி இடம்பெறுகின்றன. அதைவிட ஆலய நிகழ்வுகளிற்கும் தற்போது பெருந்தொகையான பணம் செலவிடப்படுகிறது. இப்படியான ஆடம்பரங்களை மட்டுப்படுத்தி ஒரு பகுதி பணத்தை இப்படியான பெற்றோர் இல்லாத / வறுமையில் வாடுகின்ற / மாற்றுவலுவுள்ள உறவுகளின் வாழ்வு வளம்பெறவும் செலவிடுவோமானால் அதனால் கிடைக்கும் பலன் உயர்வானதே. 
அருகில் ஒரு பிள்ளை பசியால் வாடியிருக்க, மழலை ஒன்று எதிர்காலமே கேள்விக்குறியாகி ஏங்கியிருக்க கோடிகளை கொட்டி கோபுரம் அமைப்பதிலும் பலநூறு குடம் பாலில் சிலைகளை குளிப்பாட்டுவதிலும் நிச்சயமாக எந்த பயனும் கிடைக்கபோவதில்லை. ஆயிரங்களை செலவு செய்து சூழல் அமைதியையும் கெடுத்து பக்திப்பாடல்களும் மேளதாளங்களும் முழக்க தேவையில்லை. அமைதியாக மனதினுள் வேண்டிக்கொள்ளுங்கள். இறைவனுக்கு உங்கள் மௌன மொழியே புரியும். அவர் எல்லாம் வல்லவரல்லவா?


தயவு செய்து இவர்கள் பக்கமும் உங்கள் பார்வையை திருப்புங்கள்,
இயன்றவர்கள் இவர்களுக்கு உதவுங்கள், 
இந்த குருத்துகளும் வளர வழிகாட்டுங்கள், 
இவர்களின் வாழ்வை வளப்படுத்தி அவர்கள் புன்னகையில் இறைவனை காணுங்கள்,
கல்லில் மட்டும் இறைவனை தேடும் எங்கள் பாரம்பரியங்களிலிருந்து சற்று விலகி இவர்களையும் பாருங்கள். 
இவர்களையும் எங்கள் உறவுகளாக மதியுங்கள். 
ஒளிமயமான எதிர்காலத்தை இவர்களுக்கு காட்டுங்கள்.
"சிறு துளிகள்தான் பெரு வெள்ளத்தையே உருவாக்குகின்றன
                                                                           தயவுசெய்து இவர்களிற்கு உதவ விரும்பும் உறவுகள் பின்வரும் இனியவாழ்வு இல்ல தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Tel        :- +94 21 4922702 
Mobile  :- +94 77 1102405
Fax       :- +94 21 2226566
E.mail   :- iniyavalvuillam10@gmail.com
Bank    :- Bank of Ceylon , Thirunelvely-Jaffna. A/C No. 70099517

                                                  அல்லது மேலதிக விபரங்களிற்கு இப்பதிவின் கீழோ / இப்பக்கதிற்கான முகநூல் பகுதியிலோ  உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் உரியவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.
-உண்மையுடன் அமர்நாத்.





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Saturday, April 16, 2011

இலவச இணைய மின் நூலகங்கள்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்கக்கிடைத்தால் அன்ன ஆகாரத்தைக்கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடி எடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/

planetebook.com/
e-book.com.au/freebooks
www.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/

gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/
witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/


cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram 

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/ 
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/   -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/  Download Audio books as mp3 files 

-நன்றி தமிழ் குருவி இணையம்.






This free script provided by
JavaScript Kit
missing you...

Monday, April 11, 2011

முகநூலும் பாதுகாப்பும்


இன்று அதிக அளவிலானவர்கள் பயன்படுத்துகின்ற சமூக வலைத்தளமாக Facebook (முகநூல்) அமைந்துள்ளது. அதில் உறுப்பினர்களாக கணக்குகளை பேணி வருபவர்கள் பல தரப்பட்டவர்களாகவும் உள்ளனர். உண்மையாகவும் நேர்மையாகவும் சரியான விபரங்களை பதிந்து முகநூலில் கணக்குகளை பேணுபவர்கள் சிறு தொகையினரே. பெரும்பாலானோர் தங்கள் கணக்குகளிற்கு புனை பெயர்களையோ அல்லது தமக்கு தெரிந்தவர்களின் பெயர்களையோதான் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சில செயற்பாட்டாளர்களே முகநூலினை தவறாக பயன்படுத்தி கீழ்த்தரமான செயல்களில்கூட ஈடுபடுகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இப்படியான தவறான நபர்களிடமிருந்து எமது முகநூலினை இயன்றவரை பாதுகாப்பது எப்படி என்பதற்கான ஓர் வழிகாட்டலாகவே இப்பதிவினை தரவேற்றியுள்ளேன். 
                                                          இதில் உங்கள் சந்தேகங்கள் ஏதேனுமிருப்பின் கீழே Commentsஇல் பதிவுசெய்தோ அல்லது முகநூலிற்கான விருப்பு (Like) என்ற இடத்தில் சுட்டி (Click) முகநூலின் பக்கத்தில் சென்றோ பதிவு செய்யுங்கள். அவற்றிக்கான தீர்வுகளை நண்பர்களூடகவோ அல்லது  இணைய தேடல்களினூடகவோ பெற்றுத்தர முடியும்.

முகநூல் ஆரம்பித்தல்
இயன்றவரை முகநூல் ஆரம்பிக்கும்போதே உங்களால் கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரியினையும் செல்லிடப்பேசி இலக்கத்தினையும் மற்றவர்கள் பார்க்கமுடியாத வண்ணம் மறைத்துவிடுங்கள்.ஏனெனில் மின் அஞ்சல் முகவரி தெரிந்த கணக்குகள் பிறர் முடக்கவோ அல்லது உங்களை அறியாமல் திறக்கவோ ஏதுவாக அமைந்துவிடுகின்றன. அதனால் அவற்றினை மறைத்துவிடுவதே சிறந்தது.இதற்கான வழிமுறைக்கு கீழேயுள்ளவாறு பின்பற்றுங்கள்.

முதலில் Home, Profile என்பவற்றிற்கு அடுத்துள்ள Accountஇல் Click செய்து பின்வருமாறு தொடருங்கள்.
Account -> privacy settings -> Customise settings -> Contact information -> E.mail I.D & Mobile No. => Only me என மாற்றுங்கள்.

முன்னரே கணக்குள்ளவர்கள் கூட இதை பின்பற்றி உங்கள் மின்னஞ்சல் முகவரியினையும் செல்லிடப்பேசி இலக்கத்தினையும் மறைத்துவிடலாம். 
அடுத்து மகளிர் இயன்றவரை Profile photo விற்கு உங்கள் புகைப்படத்தை இடுவதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தமது புகைப்படத்தை பிரசுரித்ததால் பல இடையூறுகளை (இடையூறுகள் எவையென்பதை விளக்க அவசியமில்லை என எண்ணுகிறேன்) எதிர்கொண்ட சிலரை நான் நேரடியாகவே கண்டுள்ளேன்.

புகைப்பட தொகுப்புகள்.
இன்று பலர் குடும்ப புகைப்படங்களை முகநூலூடாக தங்கள் உறவினர்களிடையே பகிர்ந்துகொள்கின்றனர். அதன்போது அவற்றினை உங்களுக்கு தெரியாத புதியவர்கள்கூட அவற்றை பார்க்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அப்படியான உங்கள் புகைப்படங்களை தனியான ஒரு Album இனை உருவாக்கி அந்த Album இன் கீழே காணப்படும் Edit album info என்பதில் Click செய்து வருகின்ற Box இல் Privacy என்பதை Click செய்து  அதில் Customise என்பதை தெரிவுசெயும்போது பின்வரும் Box தோன்றும்.
அதில் மூன்றாவதாக காணப்படும் Specific People... என்பதை தெரிவு செய்து அதன்பின் அதன் கீழுள்ள Box இல் யாரெல்லாம் அப்படங்களை பார்க்கவேண்டுமோ அவர்களது பெயர்களின் முதல் எழுத்துக்களை Type செய்ய அவர்களது பெயர் தானாகவே வரும். அவற்றினை தெரிவுசெய்த பின்னர்  Save Setting என்பதில் அழுத்தி சேமித்துக்கொண்டால் ஏனையவர்கள் உங்கள்  படங்களை திருடுவதிலிருந்து தடுக்கமுடியும்.

உங்கள் முகநூலை மற்றவர்கள் திறப்பதை அறிந்துகொள்ள.
இன்று தொழில் நுட்ப வளர்ச்சியில் கடவுச்சொற்களை (Pass Word) கண்டறிய பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் எமது கணக்கினை பாதுகாப்பாக பேணவேண்டியது எமது கரங்களில்தான் உள்ளது. தவறினால் எவராவது எமது பக்கத்தை திறந்து அதிலிருந்து தமது கைவண்ணங்களை காட்டிவிடுவார்கள். இதனை தடுக்க அல்லது இப்படி யாராவது உங்கள் பக்கத்தை திறப்பதை அறிய பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்.

Accounts -> Account Setting -> 


அப்போது தோன்றும் இந்த Box இல் Account security என்பதின் அருகில் உள்ள Change இல் Click செய்ய மேலே காட்டியது போன்ற பகுதி தெரியவரும். அதில் உள்ள

Secure browsing (https)

When a new computer or mobile device logs into this account:



மேலதிகமாக உங்களுக்கு முகநூலில் ஏற்படும் பிரச்சினைகளிற்கான தீர்வுகளை பெற கீழே உள்ள முகநூல் குறியீட்டில் அழுத்துங்கள்.





This free script provided by
JavaScript Kit

Wednesday, April 6, 2011

களங்கமற்ற போராளி - சே குவேரா


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (பிறப்பு-  ஜுன் 14, 1928 அன்று. இறப்பு- ஒக்டோபர் 9, 1967 அன்று) ஆர்ஜென்டீனாவில் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு  கொண்ட  போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்ஸியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி
மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது. கௌதமாலா நாட்டில் நடந்து வந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அராசங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கி எறிந்தது. இதைப் பார்த்து சே துடித்தார். தங்களின் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டதைப் பார்த்து மௌனம் சாதித்த அந்த நாட்டு மக்களின் செயல் சே குவேராவை மேலும் துடிதுடிக்க வைத்தது. அமெரிக்காவின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து அவர் புரட்சி வெடிக்கப் பேச... அவருக்கு வந்தது ஆபத்து. மெக்ஸிகோவுக்குத் தப்பி ஓடினார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை  பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு கியூபா.  கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.      
1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது.      

Fulgencio batista
1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா (Fulgencio batista) ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா? என இருந்த காலத்தில்தான் கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடிவந்த பிடெல் கேஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்தது. அது அற்புதமான நட்பாக மலர்ந்தது. கேஸ்ட்ரோவின் அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. இவரின் வீரமும் கெரில்லாப் படை சாகசங்களும் பாடிஸ்டாவை வீழ்த்தி, கேஸ்ட்ரோவின் கைகளில் க்யூபாவின் ஆட்சியை ஒப்படைத்தன. தலைமைத் தளபதி ஆனார் சே. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். 1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம்  தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து கியூபாவின் பொருளாதார அமைச்சர் ஆனார். கியூபாவை பன்னெடுங்காலமாக சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார்.  கியூபாவின் விடுதலைக்காக தன்னோடு போராடிய ஒரு பெண்ணை மணந்து இரு குழந்தைகளையும் பெற்றார். இந்த வாழ்க்கை சேவைக் கவரவில்லை. காரணம் காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டு வந்த கெரில்லாப் போராளிகளின்மீது அவரின் கவனம் சென்றது.  ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965ஆம் ஆண்டில் தனது நண்பர் கேஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு கியூபாவில் இருந்து திடீரெனத் தலைமறைவானார், வெளியேறினார். ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை  சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.      
இரு பெரும் துருவங்கள்

 அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது. அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்.
‘சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ      

சே ரால் காஸ்ட்ரோ மற்றும் பிடல்

உண்மையில் ‘சே’ ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.      

பொலிவியா காடுகளில் 

அங்கே இந்த அளப்பரிய மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி கடவுச்சீட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார்.


பொலிவியாவில் சேகுவேரா
தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ வை ஏவிவிட்டு சே குவேராவை உலகம் முழுக்கத் தேடியது அமெரிக்கா. ஆனால் காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் சே. சுமார் இரண்டு வருட காலத்தை காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே,  பொலிவியா சென்று அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால், வரலாற்றில் அது சே ஒருவர் மட்டும்தான். எதிரிகளுக்கு தெரியாமல் காடுகளில் அவர் ஒளிந்திருந்த சமயம் , பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.  மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.      

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.      

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார்

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.   

மாவீரனின் இறுதிக்கட்டப் போர் 

பிற்பகல் 3.30…  காலில் குண்டடிபட்ட  நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.      

காலில் குண்டடிபட்ட நிலையில்

மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.   

கைது செய்யப்பட்ட நிலையில்

இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

சிறை வைக்கப்பட்ட பாடசாலை

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.      
அக்டோபர் 9… அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன்  ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.      

ஃபெலிக்ஸ்ரோட்ரிக்ஸ்

 பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.      

சேவின் டைரி

சேவின் ஆயுதம் 

கசங்கிய பச்சைக்காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.     

கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல


கைவிடப்பட்ட ஏசுகிறிஸ்துவை போல

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.      
வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் "கொல்" என்பவை அதன் அர்த்தங்கள்.      
காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.   

‘மரியோ ஜேமி’ (Mario Jemy)

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.
 தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!     

‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’

மணி 1.10 மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது  தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.     

In all Guevara was shot nne times. This included five times in the legs, once in the right shoulder and arm, once in the chest, and finally in the throat
   


இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். ஆனால் அந்த வீரனின் கண் இமைகள் அப்போதுகூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்தது.
‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.     


அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.
தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று , மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

இவரின் இளமைக்காலம்
வரலாற்றின் புதிய அத்தியாயம் அர்ஜென்ட்டினாவில் ஆரம்பமாகின்றது. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் (Argentina) உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் (Ernesto Guevara Lynch), சிசிலியா டெ ல செர்னா (Sisiliya  de la Serna)  தம்பதியர்களுக்கு  முதல் மகனாக பிறக்கின்றார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். அவர்கள் தங்களுக்கு பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.      

குடும்பத்தினருடன் 

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு  குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை  அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.

இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.


அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ பேசியது:
"இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியாது அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களின் ஒன்று தான் அந்த செயல்வீரனின் முகம் ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தைக் கொண்ட ஒரு மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். இறக்கும்போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.
துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. மோதலின்போது படுகாயம் அடைந்த பின்பு அவரைக் கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக் கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப் பட்டாளத்திற்கு பொறுக்கிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும் அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகள் அழித்து விட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.
சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்து விட்டார். இப்பூவுலகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காவும் ஏழைகளுக்காகவும் இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக் கொள்வார்கள் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்தக் கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.
அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். ஆனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.
நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்து மனிதனின் முன் மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதனின் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்."

என்று சே குவேராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் கியூபா அதிபர்  பிடல் காஸ்ட்ரோவின் பேச்சில் கூறப்பட்ட "ஒரு போராளி என்பவன் புதைக்கப்படுவதில்லை, மாறாக விதைக்கப்படுகிறான்" என்கிற கூற்று சே குவேராவின் வாழ்வில் உண்மையான ஒன்றாகும். அதற்குச்சான்று இக்கூற்றேயாகும்.
மரணம் என்பது சிலருக்கு தன் வரலாற்றை தன் கொள்கையினை பிறருக்கு உணர்த்தும் கருவியாக அமையும். இவர் கீதோபதேசங்களையோ, கடவுளின் செய்திகளையே மக்களுக்காக கூறியவரல்ல. மாறாக தன் வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக விட்டுச் சென்றவர். எங்கேயெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் சே குவேராவின் வாழ்க்கை புரட்டிப் பார்க்கப்பட வேண்டிய அவசியமாகிறது.
அடிமைத்தனத்திலிருந்து போராடி மேனிலையாக்கம் பெற்றுச் சிம்மாசனத்திற்குச் சென்றவர்கள் மீண்டும் கீழ்நிலைக்காக குரல் கொடுத்தும் கொடுக்காமலும் இருந்த வரலாற்றினை அறிந்தவகையில் கீழ்நிலைமையின் தேவைக்காக மீண்டும் சிம்மாசனத்திலிருந்து கீழ்நிலைக்கு வந்த வரலாறென்பது சே குவேராவின் வரலாறு மட்டுமேயாகும். தனது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டததை நாடு, மொழி, இனம் என்று குறுகிய வட்டங்களுக்குள் சிறைப்படுத்திக் கொள்ளாதவர்.
39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவராய் இருந்தாலும் உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பெருந்தலைவருக்கும் சளைத்தவரல்ல. அப்பேர்ப்பட்ட உலகத் தலைவர் மீதும், அவரது போராட்டத்தின் மீதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏவல் படை (சி.ஐ.ஏ) மூலம் சேற்றை வாரி வீச நினைக்கிறது.
இந்த உதாரண புருஷன் இறந்த பின்னும் அவர் மீதும் ஆதிக்க சக்திகளுக்கு இருக்கும் பயம் மட்டும் இன்னும் விலகவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே வரலாற்றைத் திருத்தும் வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இனியும் இது போன்ற ஒருவர் தோன்றக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. அதற்கான பணிகளில் அது எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதாவது மனித குல விரோதிகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்.
சே குவேராவின்  உடலை சல்லடையாக துளைத்த பின்னரும், அவரது தோற்றம் விசுவரூபம் எடுத்து உலகை வியாபித்து விடுமோ என்ற பயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிம்மதி குலைக்கும் கொடுங்கனவென பரந்து கிடக்கிறது. அந்தப் பயத்தின் விளைவாகவே அவரது சரித்திரத் தோற்றத்தையும் சிதைக்க முயல்கிறது.
சி.ஐ.ஏ சற்று சாதுர்யமாகவே இதைச் செய்கிறது வெறுமனே சே குவேரா தோற்றுப் போனார் என்று கூறாமல், அவரது கோட்பாடு தோற்றது அவரது வழிமுறைகள் தவறு என்று கூறுவதன் மூலம் பின்வரும் சந்ததியினர் யாரும் சே குவேராவின் வழியைப் பின்பற்ற விடாமல் செய்யப் பார்க்கிறது.
துளியும் களங்கமற்று இருந்த பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா நட்பு மீதும் அமெரிக்க நிச்சயமாக கறை ஏற்படுத்த முயல்கிறது. தனது ஏகாதிபத்தியத்திற்கு அடங்கி நடக்கும் பொலிவிய அரசின் துணையோடு சே குவேராவை அமெரிக்கா சுட்டுக் கொல்கிறது. கொன்ற பின்பு சே குவேராவின் உடல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நினைவுச் சின்னமாக மாறி விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. பின்பு அவரது உடலை யாரும் காணாமல் ஒரு மறைவிடத்தில் புதைக்கிறது. இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா உளவுத் துறையின் ரகசியக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய அமெரிக்காவின் முகத்திரை இது போன்ற இடங்களில் கிழிக்கப்படும்போது உண்மையில் எதை நினைத்து சி.ஐ.ஏ இந்த வேலையில் இறங்கியதோ அதற்கு நேர்மாறான விளைவே இப்போது மக்களிடம் படிந்து வருகிறது. ஆம் சே குவேரா புதைக்கப்பட்ட இடத்தின் அருகே எழுதப்பட்டிருந்ததைப் போலவே அவர்கள் நினைத்தது போலில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சே. சொல்லப்போனால் இன்னும் பிரகாசமாக.

குவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர். குவேராவின் நினைவாக நிகழ்வுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.      
அலைடா குவேரா மார்ச் கூறியது போல் ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை.  கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினார் ‘ என்று கூறினார். எப்பேர்ப்பட்ட உண்மை இங்கு சாதிச் சண்டைகளிலும்,மதப் பாகுபாடுகளிலும்,எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற ‘மனிதர்கள்’ தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க நமது புரட்சியாளனோ எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிலோ போராடி எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.     




சே குவேராவின் வாழ்வில் கவனம் பெறும் நிகழ்வுகள்

  • 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
    • ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
  • 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
    • ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
  • 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
    • டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
  • 1959
    • ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
    • ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
    • ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
    • ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
    • மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
    • ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
    • ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
    • அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
    • நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  • 1961
    • ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
    • பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
    • ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
  • 1962
    • மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
    • ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
  • 1964
    • பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
    • மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
    • அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
    • டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
  • 1966
    • நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
  • 1967
    • மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
    • ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
    • ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
    • செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
    • அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
    • அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்
  • 1968
  • 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
  • 1997
    • ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
    • ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
    • அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
    • அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே சென்று படிக்கலாம்.
சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்  பல விதயங்கள் தெரிந்துக் கொள்ள இங்கே அழுத்துங்கள்.


சேவின் பிரபலமான வசனங்கள்:
“I don't care if I fall as long as someone else picks up my gun and keeps on shooting.”
“I know you are here to kill me. Shoot, coward, you are only going to kill a man.”
”Why does the guerrilla fighter fight? We must come to the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that he takes up arms responding to the angry protest of the people against their oppressors, and that he fights in order to change the social system that keeps all his unarmed brothers in ignominy and misery”
“Better to die standing, than to live on your knees.”
“I don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say. But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting to the end.”
 

(தகவல்கள் இணைய தேடல்களிளிருந்து பெற்று தொகுக்கப்பட்டுள்ளன.
ஓர் அற்புதமான விடுதலை வீரனின், சுதந்திர சிந்தனையாளனின் வரலாறு இயன்றவரை முழுமையாக இருக்கவேண்டும் என்ற முயற்சியே இது. உதவிய Greatche, விக்கிபீடியா போன்ற இணையங்களிற்கு மனமார்ந்த நன்றிகள்.)



This free script provided by
JavaScript Kit