"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, July 16, 2011

மீள் மாற்றம் (Remix Song) -8


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவிலே வாழும் உள்ளமே இது முடிவா?
 இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
(இசை) சரணம் - 1
நான் போகும் பாதைகளோ
காட்டின் ஓடை
நான் வாழும் வாழ்க்கையுமோ
சிலுவை பாதை

காலம் என்பதா? கோலம் என்பதா?
யார் செய்த பாவம்?
காலம் என்பதா? கோலம் என்பதா?
யார் செய்த பாவம்?

ஏற்றுகொள்ள  தடுக்குதடி
நான் வாழும் வாழ்வு
சேர்த்துவைக்க மறுத்து நிற்கும்
ஊர் கொண்ட வழக்கம்
நான் கொண்ட அன்பாலே
என் உள்ளம் வேகுதே

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவில் வாழும் உள்ளமே இது முடிவா?
இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது

(இசை) சரணம் -2
பிறப்பிலே எழுதி வச்ச
எழுத்துகள் அங்கே
அதன்படி ஓடுகிற
வாழ்க்கைதான் இங்கே

படிப்பில் பட்டமும் வாழ்வில் தேட்டமும்
தேடும் இங்கு உலகம்
படிப்பில் பட்டமும் வாழ்வில் தேட்டமும்
தேடும் இங்கு உலகம்

கண்டங்கள் தாண்டி நின்று
ஆசை வந்ததேனோ?
உணர்வுகள் பேசிக்கொள்ள
உள்ளங்கள் கண்டதென்ன?
கடல் தாண்டி நின்றாலும்
நினைவுகள்தான் கூடுதே,

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
கண்டதும் இல்லை, கதை கேட்டதும் இல்லை,
 வாழ்வில் இது விதியா?
நினைவில் வாழும் உள்ளமே இது முடிவா?
இல்லை தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
(இசை) சரணம் - 1
நாம் போடும் மேடைகளோ
நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ
காகித ஓடம்

பாசம் என்பதா? வேஷம் என்பதா?
காலம் செய்த கோலம்
பாசம் என்பதா? வேஷம் என்பதா?
காலம் செய்த கோலம்

கூடி வாழ கூடுதடி
ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும்
யார் செய்த பாவம்?
தாய் என்னும் பூமாலை
தரை மேலே வாடுதே

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
(இசை) சரணம் - 2
காலங்கள் மாறி வரும்
காட்சிகள் இங்கே?
நியாயங்கள் ஆறுதலை
கூறுவதெங்கே?

மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை

பாசதீபம் கையில் ஏந்தி
வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட
இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும்
நலமோடு வாழ்கவே

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை, அன்னையும் இல்லை,
கனவா? வெறும் நினைவா?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா?
சிறுகதையா?

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்
 






வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Wednesday, July 13, 2011

மீள் மாற்றம் (Remix Song) -7

புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?
உண்மை இல்லா உலகினில் நியாயம் மட்டும் வாழுமோ?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

உண்மையென்று நம்பினேன்
இல்லை என்று காட்டினாய்
சிகரமென்று எண்ணி நின்றேன்
பள்ளமென்று மாற்றினாய்

அருகில் நெருங்கவில்லையே
ஆனபோதும் படுத்தினாய்
நான் பார்த்த திசையை விட்டு
எதிர்திசையில் நோக்கினாய்

நிலை இல்லா இந்த உலகில் வாழ்வு சிலகாலம் கொண்டது
மனம் போல வாழும் நினைவு பகல் கனவு போன்றது
பகல் கனவு போன்றது

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

கோடு ஒன்று கீறினேன்
கேள்வியாக மாற்றினாய்
எந்தன் நெஞ்சில் நினைவையெல்லாம்
அழித்துவிட்டு ஓடினாய்

உணர்வுகளை நோக்கினேன்
திரையை இட்டு மூடினாய்
பாதை என்று எண்ணி நின்றேன்
முடிவு என்று காட்டினாய்

ஒரு காதல் வாழ உள்ளம் மட்டும் போதாதென்று ஆனது
ஏழ்மை வந்து தடைக்கல்லாகி கனவாய் எல்லாம் போனது
கனவாய் எல்லாம் போனது

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?
உண்மை இல்லா உலகினில் நியாயம் மட்டும் வாழுமோ?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?
வேஷம் போடும் பூமியில் நியாயம் தோற்று ஓடுமோ?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ

தேவையென்று நாடினேன்
தீயில் என்னை வாட்டினாய்
தேவி என்று ஓடி வந்தேன்
திராவகத்தை ஊற்றினாய்

ஆயுதங்கள் இல்லையே
ஆனபோதும் தாக்கினாய்
நான் வடிக்கும் கண்ணீர் தொட்டு
ஓவியங்கள் தீட்டினாய்

அலை பாயும் தேகம் சூழும் சோகம் நாளும் நாளும் நீண்டது
குடை சாயும் வாழ்வில் கூடும் ஆசை கானல் நீரை போன்றது
கானல் நீரை போன்றது

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?

பூப்பறித்து சூட்டினேன்
வாடவைத்து போகிறாய்
பூசுமஞ்சள் வாசமெல்லாம்
மோசமென்று பேசினாய்

சாமரங்கள் வீசினேன்
வீசும் கையை நீக்கினாய்
தாகம் என்று ஏங்கி நின்றேன்
சாளரத்தை பூட்டினாய்

ஒரு தாழம்பூவில் தேனைத்தேடி வானம்பாடி போனது
அரங்கேறும் நேரம் பூவின் ஈரம் வேர்வை போல ஆனது
வேர்வை போல ஆனது

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ
வேஷம் போடும் பூமியில் நியாயம் தோற்று ஓடுமோ
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Friday, July 8, 2011

மீள் மாற்றம் (Remix Song) -6


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.


நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்
தலைவிதிய அறியவில்ல மனசில் வச்சு பழக்கமில்ல
மனுதர்மம் நிலைக்கவில்ல மனிதர்களில் இரக்கம் இல்ல

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நேர்மைய விட்டுப்புட்டா வாழ்க்கைக்கொரு அர்த்தமில்ல
பழகின பாதையில நடப்பது பாவமில்ல
என்னவோ மோகம் என்னென்னவோ வேகம்
எங்கெங்கோ ஓடும் விடைதேடும் கூட்டம்

எல்லாமே எம் விதிதான் ஆஆ..
எல்லாமே எம் விதிதான் விதியில் பொறந்த சந்ததிதான்
பரிவு என்பதும் பாசம் எனபதும்
தங்களின் தேவைக்கு அப்புறம்தான்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

வழியில் மேடுபள்ளம் நிறைந்த வாழ்க்கையடி
வாழ்க்கையில் துன்பம் வேணும், அதில பாடம் படி
உன்னையே பாரு, நீ பெற்ற பேறு
உனக்கும் கீழே பலர் படும் பாடு

சொன்னது ஏதும் தப்பா ஆ ஆ..
சொன்னது ஏதும் தப்பா வாழ்கையில் புதுசு என்னதப்பா
வாழ்ந்து பட்டவன், எல்லாம் விட்டவன் வாழ்ந்து பார்த்து சொன்னதப்பா
வாழ்ந்து பட்டவன், எல்லாம் விட்டவன் வாழ்ந்து பார்த்து சொன்னதப்பா

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்
தலைவிதிய அறியவில்ல மனசில் வச்சு பழக்கமில்ல
மனுதர்மம் நிலைக்கவில்ல மனிதர்களில் இரக்கம் இல்ல

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

ம ப த ம நாடறியேன் நகரறியேன்
ச ரி க ம ப த ம நாடறியேன் நகரறியேன்
ப த நி ச நி த ம க க ரி நாடறியேன் நகரறியேன்
ச ச ரி க ச ரி க ம க ச ப த ம
ம ம ப த ம ப த நி த ம ப த நி
ப த நி ச ரி க ச நி த ம ப த நி
ச நி த ப த நி த ம ப ம த க ம ப த ம க ம க ச
ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி த
ம ம ம ம ம ம ப த நி ச ரி ச ரி க ம க
ச ச ரி ரி க க ம ம ப ப த த நி நி ச
ரி க ச ச நி ச நி நி த
ம ப த நி த நி த ப ம
க ம க ச ரி க ம ப த ம ப த நி ச
ரி க ப க ச நி த ப க
 
மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம் 
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல 
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல 
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன் 
அர்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம் 
எல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ.. 
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான் 
சஜ்ஜமமென்பதும் தெய்வதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

கவல ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி
என்னையே பாரு எத்தன பேறு
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு 
சொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ.. 
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா.. 
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
 
ம ப த ம பாடறியேன் படிப்பரியேன்
ச ரி க ம ப த ம பாடறியேன் படிப்பரியேன்
ப த நி ச நி த ம க க ரி பாடறியேன் படிப்பரியேன்
ச ச ரி க ச ரி க ம க ச ப த ம
ம ம ப த ம ப த நி த ம ப த நி
ப த நி ச ரி க ச நி த ம ப த நி
ச நி த ப த நி த ம ப ம த க ம ப த ம க ம க ச
ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி த
ம ம ம ம ம ம ப த நி ச ரி ச ரி க ம க
ச ச ரி ரி க க ம ம ப ப த த நி நி ச
ரி க ச ச நி ச நி நி த
ம ப த நி த நி த ப ம
க ம க ச ரி க ம ப த ம ப த நி ச 
ரி க ப க ச நி த ப க
 
 
உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்

 

வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.