"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Wednesday, July 13, 2011

மீள் மாற்றம் (Remix Song) -7

புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?
உண்மை இல்லா உலகினில் நியாயம் மட்டும் வாழுமோ?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

உண்மையென்று நம்பினேன்
இல்லை என்று காட்டினாய்
சிகரமென்று எண்ணி நின்றேன்
பள்ளமென்று மாற்றினாய்

அருகில் நெருங்கவில்லையே
ஆனபோதும் படுத்தினாய்
நான் பார்த்த திசையை விட்டு
எதிர்திசையில் நோக்கினாய்

நிலை இல்லா இந்த உலகில் வாழ்வு சிலகாலம் கொண்டது
மனம் போல வாழும் நினைவு பகல் கனவு போன்றது
பகல் கனவு போன்றது

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

கோடு ஒன்று கீறினேன்
கேள்வியாக மாற்றினாய்
எந்தன் நெஞ்சில் நினைவையெல்லாம்
அழித்துவிட்டு ஓடினாய்

உணர்வுகளை நோக்கினேன்
திரையை இட்டு மூடினாய்
பாதை என்று எண்ணி நின்றேன்
முடிவு என்று காட்டினாய்

ஒரு காதல் வாழ உள்ளம் மட்டும் போதாதென்று ஆனது
ஏழ்மை வந்து தடைக்கல்லாகி கனவாய் எல்லாம் போனது
கனவாய் எல்லாம் போனது

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?
உண்மை இல்லா உலகினில் நியாயம் மட்டும் வாழுமோ?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?
வேஷம் போடும் பூமியில் நியாயம் தோற்று ஓடுமோ?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ

தேவையென்று நாடினேன்
தீயில் என்னை வாட்டினாய்
தேவி என்று ஓடி வந்தேன்
திராவகத்தை ஊற்றினாய்

ஆயுதங்கள் இல்லையே
ஆனபோதும் தாக்கினாய்
நான் வடிக்கும் கண்ணீர் தொட்டு
ஓவியங்கள் தீட்டினாய்

அலை பாயும் தேகம் சூழும் சோகம் நாளும் நாளும் நீண்டது
குடை சாயும் வாழ்வில் கூடும் ஆசை கானல் நீரை போன்றது
கானல் நீரை போன்றது

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?

பூப்பறித்து சூட்டினேன்
வாடவைத்து போகிறாய்
பூசுமஞ்சள் வாசமெல்லாம்
மோசமென்று பேசினாய்

சாமரங்கள் வீசினேன்
வீசும் கையை நீக்கினாய்
தாகம் என்று ஏங்கி நின்றேன்
சாளரத்தை பூட்டினாய்

ஒரு தாழம்பூவில் தேனைத்தேடி வானம்பாடி போனது
அரங்கேறும் நேரம் பூவின் ஈரம் வேர்வை போல ஆனது
வேர்வை போல ஆனது

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ
வேஷம் போடும் பூமியில் நியாயம் தோற்று ஓடுமோ
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?
விழி நீரில் சோகம் தீருமா?
உலை நீரில் மீன்கள் வாழுமா?

ஊமை பாடும் பாடலை யார்தான் கேட்க கூடுமோ?

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment