"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Sunday, August 21, 2011

மீள் மாற்றம் (Remix Song) -9

Photobucket


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை

எனக்கும் வாழ்வு புரிந்திருக்கே 
அதை நான் எழுதி வைக்கட்டுமோ ஹோய்
எனக்கும் இதயம் வலித்திருக்கே
அதை யாருடன் பகிரட்டுமோ

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை


சில புதிர்கள் புரிந்திருந்தால்
பாதைகள் எல்லாம் தெரிந்திருக்கும்
என் நினைவில் அறிந்திருந்தால்
கனவுகள் கூட நிலைத்திருக்கும்
இரவு பொழுது வந்திருந்தால்
சூரியன் ஒன்றும் அழிவதில்லை
தெளிவுடனே நான் இருந்தும்
வாழ்கை இன்னும் தெளியவில்லை

தேடல்கள்கூட நடக்கும்
இந்த பாதையில் என்ன நடக்கும்?
தேடல் இருக்கும் வரைக்கும்
இந்த வாழ்க்கையும் கொஞ்சம் ருசிக்கும்
நினைவுகள் கனவென கலைந்த பின்னே
அது மறுபடி சேர்ந்திட நினைத்திடுமா?

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை


விதிவழிகள் கண் கட்டியே
பயணம் மெல்ல செல்கிறதே
என்வழிகள் சரியில்லையா?
இதயம் கொஞ்சம் கனக்கிறதே
என் வழியில் நான் நடந்தும்
எந்தன் கையில் எதுவும் இல்லை
மனதினிலே திடம் இருந்தும்
பிரிவுகள் தவிர்க்க முடிவதில்லை
இழப்புகள் உள்ளுக்குள் வலிக்கும்
அதை மறைத்து முகமோ சிரிக்கும்
காலம் அழைக்கும் வரைக்கும்
என் பயணம் தொடர்ந்து நடக்கும்
தினம் தினம் நினைவுகள் வதைக்கிறது
என் விழிகளில் நீரும் கசிகிறது

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை

எனக்கும் வாழ்வு புரிந்திருக்கே 
அதை நான் எழுதி வைக்கட்டுமோ ஹோய்
எனக்கும் இதயம் வலித்திருக்கே
அதை யாருடன் பகிரட்டுமோ 



மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

நீர் துளிகள் நிலம் விழுந்தால் 
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

வாம் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் 
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
 உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment