"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Sunday, October 9, 2011

மீள் மாற்றம் (Remix Song) -10


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

இப்படி இங்கொரு
சீர்கேடு நடக்க
தன்னிடம் தடுக்க
வலிமை இன்றிதான்
இறைவனும் தூங்கிவிட்டான்

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

இப்படி இங்கொரு
சீர்கேடு நடக்க
தன்னிடம் தடுக்க
வலிமை இன்றிதான்
இறைவனும் தூங்கிவிட்டான்

எமது கனவுகள் சிதைந்த வாழ்வு
கண்ணின் முன்பு நடக்கும் போது
கனவு கலைந்து உள்ளம் வேகின்றதே

ஓஹோ... எமது விழிகள் அதனை பார்த்து
மனது உடைந்து கலங்கும் பொழுது
கனவு சிதைந்து மண்துகள் ஆகின்றதே

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

வாழ்வின் ஒளியை
தொலைத்து தொலைத்து
இருளில் நடந்து
இருளில் நடந்து
தவறுகள் செய்துவிட்டான்

தனது பெருமை
இழந்து இழந்து
இனத்தின் சந்தங்கள்
அழித்து அழித்து
இளமையை தொலைத்துவிட்டான்

ஒழுக்கம் என்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?
என்பதில் உனக்கு சந்தேகம் எதுக்கு?
ஒழுக்கம் என்பது நிச்சயம் பொதுப்பாலடா

ஏஹே... வாழ்க்கை என்பது அனுபவிப்பது
என்றொரு கருத்து உனக்கு தகாது
வாழ்க்கை என்பது நெறியின் வடிவமடா

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

மோகங்கள் பிடித்து
மோகங்கள் பிடித்து
கனவுகள் கலைத்து
கனவுகள் கலைத்து
பெண்ணவள் கற்பிழந்தாள்

கல்வியை விடுத்து
குடும்பத்தை மறந்து
மகிழ்வாய் நினைத்து
மஞ்சத்தில் இணைந்து
தன்னையே ஏன் கெடுத்தாள்?

வீட்டு உறவினை பேணி வளர்ப்பவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை கொடுப்பவள்
பெண்ணின் பிறப்புக்கும் அர்த்தம் கொடுப்பவளே

ஓஹோ... தாய்மை என்ற உறவை தந்திட
இரக்க குணங்கள் உணர்வை தந்திட
ஆக்கம் அழிவு ரெண்டும் பெண்ணவளே

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்
மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

நிலவின் ஒளியை
பிடித்து பிடித்து
பாலில் நனைத்து
பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

உலக மலர்கள்
பறித்து பறித்து
இரண்டு பந்துகள்
அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டான்

அழகு என்பது ஆண்பாலா? பெண்பாலா?
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா

ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து
கண்களில் பதித்து
கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து
கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்?

காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்
ஆலுக்கும் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம், மரணம் ரெண்டும் தருபவளே

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

2 comments: