"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, December 24, 2011

மீள் மாற்றம் (Remix Song) -11

Myspace Sad Lonely Graphics Crying Clipart
புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.
ஆண் குரலில்...
யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

நினைவே நினைவே
உன்னை யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
உள்ளத்தில் உந்தன் பிரதி விம்பம்
நீ தந்தது...
இதமாய் உள்ளது
நீ வாழும் வாழ்விற்கு நான் அர்த்தமாய்
உன் கோபம் அன்புக்கும் நான் சொந்தமாய்
உன் கனவிலே...
ஒளி நான் இல்லையா?

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

இன்னிசை போலே
உன் குரல் கேட்டு
நான் தானம்மா...
ரசித்தேன் மௌனமா
என்னோடு நீ கொண்ட நட்பின் சொந்தம்
நினைவுக்குள் எப்போதும் வந்து செல்லும்
என் மண்ணிலே...
உன்னன்பை கேட்கிறேன்

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது 

நினைவே நினைவே
உன்னை யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது?
யார் நொந்தது?
நெஞ்சம் தள்ளாடுது

யார் கேட்டது?
காதல் ஏன் வந்தது

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

ஆண், பெண் குரல்களில்...
யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மனமே மனமே
உன்னை யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
நெஞ்சுக்குள் உந்தன் காலடி சத்தம்
நீ வந்தது...
சுகமாய் உள்ளது
நீ சொல்லும் சொல்லுக்கு நான் அர்த்தமாய்
உன் வெள்ளிக்கொலுசுக்கு நான் சத்தமாய்
உன் கண்ணிலே...
இமை நான் அல்லவா?

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மெல்லிசை போலே
நீ வரும் போது
நான் யாரம்மா?
இருந்தேன் மௌனமா
என்னோடு நீ பேசி சென்ற பின்பும்
ஞாபகம் ஒவ்வொன்றும் என்னைக்கொல்லும்
என் சுவாசமே...
உனக்காய் வாழ்கிறேன்

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது

மனமே மனமே
உன்னை யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?
யார் வந்தது?
கண்கள் தாலாட்டுது...

யார் பார்த்தது?
உள்ளம் ஏன் பூத்தது?


உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்



Photobucket




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Sunday, December 11, 2011

மாவீரன் அலெக்சாண்டர்

"இந்த கல்லறையில் உறங்குபவன் உலகையே வென்றவன் என்று பொறித்து விடுங்கள். ஆனாலும் போகும்போது எதையும் எடுத்து செல்லவில்லை என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் என் இறுதி ஊர்வலத்தின் போது என்கைகள் வெளியில் தெரியும்படி கொண்டு செல்லுங்கள்."
- [அலெக்சாண்டர்]

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசர். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தார். ஆனால், கிரீசுக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானார். தனது பணம், படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவர் உணர்ந்த அந்த நிமிடம் மரணத்தின் அழைப்பை உணர்ந்து அவது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தார்.

1, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

2, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவர் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை கற்களை புதைக்க வேண்டும்.

3, அவர் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவர் சொன்ன காரணங்கள்...
"இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்"
முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...
"இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".
இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...
"எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".
மூன்றாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...
"வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

வரலாற்றுச்சுருக்கம்
பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராக திகழ்ந்தவர் மகா அலெக்சாண்டர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.
மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தை திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர் அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப்பகுதிகளை வெல்வதற்கு இந்தப்படையைப் பயன்படுத்தினார். பிறகு தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். தொடர்ந்து கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார்.
அந்தக் கூட்டாட்சிக்குத்தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப்பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். கி.மு.336ஆம் ஆண்டில் அந்தப்படையெடுப்பு தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாண்டருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும் அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாண்டருக்கு தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாண்டர் கணிசமான அளவுக்கு போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக்கல்வி அளிப்பதிலும் ஃபிலிப் கவனக்குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்க பேரறிஞராகிய அரிஸ்டாட்டில் ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி அலெக்சாண்டருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.
கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக்கருதினார். ஆயினும் அலெக்சாண்டர் தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வசப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார். மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய வலிமை வாய்ந்த, செல்வச்செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது. அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத்தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாண்டர் தமது படையின் ஒரு பகுதியைத்தாயகத்திலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத்தொடங்கியபோது அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக்குறைவாக இருந்தது. அலெக்சாண்டரின் படை பாரசீகப்படையைவிட சிறியதாக இருந்தபோதிலும் அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது.
அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக ஃபிலிப் மன்னர் விட்டுச்சென்ற இராணுவம் பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக அலெக்சாண்டர் மகத்தான இராணுவத்திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத்திகழ்ந்தார் என்றுகூடக்கூறலாம். மூன்றாவதாக அலெக்சாண்டர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக்கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாண்டரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்கு தாமே நேரடியாகத்தலைமைதாங்கி போரிடுவதை தமது கொள்கையாக கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால் அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால் அவரது படையினர் தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற்கொள்ளத்தயங்கும் அபாயத்தை ஏற்கும்படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது. அலெக்சாண்டர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாக செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப்படைகளை தோற்கடித்தார். பிறகு, வடக்குச்சிரியாவுக்குள் நுழைந்து இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப்படையை படுதோல்வியடையச்செய்தார்.
அதன் பின்பு அலெக்சாண்டர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப்படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக்கடினமான ஏழுமாத முற்றுகைக்குப்பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாண்டர் முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபோது அலெக்சாண்டருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக்கொடுத்துவிட தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாண்டருக்கு தூது அனுப்பினார். டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாண்டர் தொடர்ந்து தெற்கு நோக்கிச்சென்றார்.
இருமாத கால முற்றுக்கைக்குப்பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர் அலெக்சாண்டர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது 24 வயதே ஆகியிருந்த அலெக்சாண்டர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக்கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் தம்படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு.331ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரு பெரிய பாரசீகப்படையை அவர் முற்றிலுமாகத்தோற்கடித்தார். ஆர்பெலா வெற்றிக்குப்பிறகு அலெக்சாண்டர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத்தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர் அலெக்சாண்டரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதை தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும் அலெக்சாண்டர் டரையசுக்குப்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத்தோற்கடித்து அவரைக்கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப்படுத்தினார். பின்பு மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார். இப்போது பாரசீகப்பேரரசு முழுவதும் அலெக்சாண்டருக்கு அடிமைப்பட்டுவிட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி புதிய ஆட்சிப்பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் நாடுகளைப்பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச்சென்றார். அங்கிருந்து அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத்தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க முனைந்தார்.
ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டு களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்துச்செல்ல மறுத்தனர். அதனால் அலெக்சாண்டர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார். பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச்செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப்பணியாக விளங்கியது. கிரேக்கப்பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாண்டர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக்கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாண்டர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள் தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால் அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிக கூட்டுப்பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராக தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக்கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான உரிமைகளை பெற்று வாழ மனதார விரும்பியதாகத்தோன்றுகிறது. தமது இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக்கொண்டார்.
கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனிய படை வீரர்களுக்கும் ஆசியப்பெண்களுக்கும் மணம் முடிக்கப்பெற்றது. அலெக்சாண்டர் கூட தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்த போதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத்திருமணம் செய்து கொண்டார். மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக்கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாண்டர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத்திட்டமிட்டிருந்தார். பாரசீகப்பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும் ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323ஆம் ஆண்டு ஜூன் மாதத்தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாண்டர் திடீரென காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை. அலெக்சாண்டர் தமது வாரிசை நியமித்துவிட்டுச்செல்லவில்லை. அவர் இறந்ததும் அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாண்டரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அலெக்சாண்டர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால் அவர் உயிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால் அலெக்சாண்டரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை. அலெக்சாண்டர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக்கதைகள் புனையப்பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராக திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாண்டர் திறமை, அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத்திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால் ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை. அதே சமயத்தில் அலெக்சாண்டர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையை பொன்போல் போற்றினார்.
கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்க சிந்தனையாளர்களைவிட அதிக பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்கு பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்கு பெரிதும் காரணமாகும். அலெக்சாண்டர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டு குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார். நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப்போன்று, அலெக்சாண்டர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச்செல்வாக்கு அவர்களுடையதைவிட குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப்போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக்குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்கு சென்றது.
அலெக்சாண்டரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாண்டரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பும், உடனடியாக ஈரான், மெசொப்பொட்டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப்பண்பாடு விரைவாகப்பரவியது. அலெக்சாண்டருக்கு முன்பு இந்த மண்டலங்களில் கிரேக்கப்பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப்பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாண்டர் பரப்பினார். பண்பாட்டுச்செல்வாக்கு என்பது எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாண்டர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்து பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமய கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின.
பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச்செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப்பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது. அலெக்சாண்டர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டு கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹிராத், கண்டஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின. ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாண்டரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இருவருடைய செல்வாக்கை விடக்குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாண்டரின் செல்வாக்கைவிட மிகக்குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாண்டர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம்பெற்றிருக்கிறார். வரலாற்றிலும் வேறுபட்ட மனிதராக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.
Photobucket

Thursday, November 24, 2011

நினைவுள்ளவரை...

நெஞ்சம் மறப்பதில்லை - அது
நினைவை இழப்பதில்லை
 




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.
Photobucket

Saturday, October 22, 2011

லிபியாவின் உடைந்துபோன இரும்புக்கரம்

கேணல் கடாபியின் வரலாற்றுச்சுருக்கம்.
லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கேணல் முகம்மர் கடாபி, தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல வார காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக்கோரிவருகிறது.

கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த ராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு முன் “என்னை சுடாதே” என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார். ஆயினும் கடாபி முன்னர் ஊடகங்களுக்கு கூறியதைப்போலவே தனது மண்ணிலேயே உயிரை விட்டுள்ளார்.

முகம்மர் கடாபி, இளம் வயதிலேயே லிபிய இராணுவ வீரராக இருந்தவர். 1965இல்பெங்கசி இராணுவ பல்கலை கழகத்தில் கற்று பின்னர் 1966இல் பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சியும் பெற்றிருந்தார். 1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ரத்தமில்லா ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியைப்பிடித்து லிபிய அரபு குடியரசு என பிரகடனம் செய்தபோது அவர் லிபியாவின் மீட்பராக பார்க்கப்பட்டார். 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாபி, சக ராணுவத்தினரால் சகோதரத் தலைவர் என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நல்லபெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்த புதிதில் தன்னை மக்கள் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.

1942ஆம் ஆண்டு பிறந்த கடாபியின் சரியான பிறந்த நாள் எது என்பது முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் ஜூன் ஏழாம் நாள் என கூறப்படுகிறது. ஆங்கர்ண்ய் பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் பெருமைப்பட்டார். உதாரணமாக தனது விருந்தாளிகளை நாடோடி கொட்டகையில் வரவேற்பது முதல், தனது வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது சாமானிய பின்புலத்தை அவர் மறக்காமல் காட்சிப்பொருளாக்குவார்.

ஆனால் அவரது ஆட்சியில் நாட்டில் அரசியல் கட்சிகள் எதையும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையற்ற அவரது தலைமையிலான ஆட்சியில் எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்கள் ஒன்று சிறை சென்றார்கள். இல்லாவிட்டால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.

ஆரம்பம் முதலே அவர் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தார். மத்திய கிழக்கு பிரதேசத்திலும், உலக அரங்கிலும் அவருக்கு ஆதரவிருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.

அவருக்கும் மேற்குலகுக்குமான மோதல் எண்பதுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. வெளிநாடுகளில் செயற்பட்டுவந்த ஆயுத குழுக்கள் பலவற்றை அவர் ஆதரித்தார். பாலத்தீன விடுதலை குழுக்களிலிருந்து, அயர்லாந்து ஆயுத குழுக்கள் வரை இவரது ஆதரவு பட்டியலில் இடம்பிடித்தன. இதனால் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று மேற்குலக நாடுகள் அவரை பல தசாப்தங்களாக திட்டிவந்திருக்கின்றன.

லண்டனில் இருக்கும் லிபிய தூதரகத்திற்கு வெளியே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியாவுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.

நான்காண்டுகள் கழித்து, ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரத்தின் மேல் வான்பரப்பில் அமெரிக்க ஜம்போ விமானம் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சர்வதேச அரங்கில் கர்னல் கடாபி தீண்டத்தகாதவராக மாறினார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்கியத்தைத் தொடர்ந்தும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தும் அவர் சர்வதேச நாடுகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக அங்கீகரிக்கப்பட்டார். மேற்குலக நாடுகளுடனான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் இத்தகைய சாதகமான மாற்றங்களை அவர் தனது உள்நாட்டு அரசியலில் முன்னெடுக்கவில்லை. விளைவு, வட ஆப்ரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும் வலுப்பெற்ற சீர்திருத்த கோரிக்கைகளின் தாக்கம் லிபியாவில் வலுவடைந்தபோது கடாபியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. தனது ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்ற கடாபி, கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த ஊரான சித்ரில் சென்று தஞ்சம் புகுந்தார். இறுதியில் அங்கேயே கொல்லப்பட்டுமுள்ளார்.

இவரது ஆட்சியில் லிபியாவில் காணப்பட்ட சிறப்புகள்
1)லிபிய குடிமக்கள் எவரும் மின்சாரகட்டணம் செலுத்தவேண்டியதில்லை.

2)லிபிய அரசின் வங்கிகளில் எந்த ஒரு லிபிய குடிமகனும் 0% வட்டிக்கு வங்கிகடன் பெற்றுகொள்ளலாம்.

3)லிபிய மனித உரிமைகளில் ஒன்று : லிபிய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனிதனி வீடுகள் பெற்றுகொள்ளலாம்,
கடாபி இறக்கும் நேரம் வரை கடாபியின் தாயும் தந்தையும் ஒரு தகர கூடாரத்தினுள்ளே வாழ்ந்துவருகின்றனர்.

4)லிபிய குடிமக்கள் எவரும் புதிதாக மணம் முடிக்கும் போது லிபிய அரசினால் $50000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

5)லிபியாவை கடாபி தன் தலைமைபொறுப்பில் ஏற்கும் போது, லிபியாவின் கல்விகற்றோர் 25 விகிதம், தற்போது 83 விகிதம்.

6)எல்லா லிபியகுடிமகனும் விவசாயம் செய்யவேண்டும், அதற்கான நிலம், உபகரணங்கள், விதைகள், உரங்கள் , அனைத்தும் இலவசம்.

7)லிபிய குடிமகன் எவரும் தமது கல்வி அல்லது மருத்துவ தேவைக்காக வெளிநாட்டுக்கு செல்லவேண்டி இருப்பின், அவர்களின் இருப்பிட மற்றும் போக்குவரத்துக்காக மாதாந்தம் $2300 அமெரிக்க டொலர்கள் லிபிய அரசினால் வழங்கப்படும்.

8)ஒரு லிபிய குடிமகன் , மோட்டார்வாகனம் ஒன்று வாங்க முற்படும் வேளை லிபிய அரசினால் அதன் பெறுமதியின் 50% உதவிதொகை வழங்கப்படும்.

9)லிபியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை $0.14

10)கடாபியின் ஆட்சி இருந்தவேளை , லிபியாவின் வெளிநாட்டுகடன் $0 , லிபியாவின் தற்போதைய திறைசேரி இருப்பு $150 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

11)ஒரு லிபிய குடிமகன் பட்டதாரி ஆகி தன் தகுதிக்கான வேலையினை பெற்றுகொள்ளும்வரை அவர்களின் வாழ்க்கைசெலவுக்காக, அவர்களின் தகுதிக்கு அவர்களால் பெற்றுகொள்ளகூடிய சம்பளத்தின் 80% சம்பளம் வழங்கப்படும்.

12)லிபிய நாட்டின் என்ணைவளத்தினை வெளிநாடுகளுக்கு விற்று கிடைக்கும் இலாபத்தின் ஒரு பங்கு இலாபத்தை அனைத்து லிபிய குடிமக்களினதும் வங்கிக்கணக்குகளில் சமமாக பகிரப்படும்.

13)லிபியாவில் நாற்பது துண்டுகள் கொண்ட பாணின் விலை $0.15 அமெரிக்க டொலர்கள்.

14)லிபிய சனத்தொகையில் 25% ஆனோர் பல்கலைகழக பட்டதாரிகள்.

15)கடாபியினால் தொடங்கப்பட்டிருக்கும் (அனைத்து பாலைவனங்களினூடாகவும் பாயும்) உலகிலேயே மிக பெரிய செயற்கை ஆறு இன்னும் முற்றுபெறாது உள்ளது.

இவரது மரணம் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் சில... 
1)இவர் ஒரு வாகனத் தொடரணியில் தப்பிப் போகும்போது நேட்டோ படைகள் குண்டு வீசியதால் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், பின்னர் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது.
2)ராய்டர் செய்தித்தாபனம் இவர் சிற்றா நகரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
3)நூற்றுக்கணக்கான வாகனத்தொடரணியுடன் இவர் தப்பியபோது குண்டு வீச்சில் காயமடைந்து மரணமடைந்தாகக் கூறப்படுகிறது.
4)சீமெந்து குழாய்க்குள் இருந்தே கடாபியின் சடலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
                                இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இன்று ஒலி,ஒளி ஆதாரங்களுடன் நடந்தது என்ன என்பது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
கிளர்ச்சிப்படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப்படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந்நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர்.

கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத்தொடரணி மீது நேட்டோ படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றதாக நேட்டோப்படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகன தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பாதுகாப்புக்குச்சென்ற வாகனங்களை துல்லியமாகத்தாக்கியழித்துள்ளது நேட்டோப்படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக்குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர்.

காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து மேற்சட்டையை களற்றி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் கேவலப்படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.

 
ஆனால் கடாபி தன்னை சுடவேண்டாம் என கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக்கட்டியது. நேட்டோ இராணுவம் மேற்கொண்ட செயல் போரியல் தர்மங்களுக்கு முரணானது என்பதை நன்கு உணர்ந்த மேற்குலகம், அதை மூடிமறைக்க முயன்று ஏதோ கண்ணியமான ஒரு நடவடிக்கையை நேட்டோப்படைப்பிரிவு செய்ததாக உலகுக்கு காட்ட நினைத்தது.

அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய போது கையில் ஆயுதங்களற்ற நிராயுத பாணியான அவரை கேவலமான முறையில் கொன்று அதை வெற்றி பெருமிதத்துடன் வெளியிடுவது உண்மையில் நீதிக்கு புறம்பான தர்மத்தை மீறிய செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதில் அடுத்த கேவலமான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுநரை முதலில் கைகளைக்கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு அதை மறைத்து பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப்படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன. இவரை பிடித்து உயிருடன் வாகனமொன்றில் ஏற்றியிருந்த படங்கள் வெளியாகி பொய் முகத்தை வெளிச்சமிட்டுள்ளன.

கடாபி சர்வாதிகாரியாக செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சி முறையில் மக்களை ஒடுக்கி குற்றங்களை புரிந்த ஒரு ஆட்சியாளர்தான் என்பதை மறுப்பதற்கில்லை. உலக நீதிப்படி குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டிய அவரை சுட்டுக்கொலைசெய்தமை நியாயப்படுத்த முடியாத செயலே. போரியல் தர்மத்தில் நிராயுதபாணியான எவர்மீதும் (அவர் போர் வீரனாகவே இருபினும்) தாக்குதல் நடத்துவதோ அல்லது கொலை seivatho அனுமதிக்கப்படவில்லை. அடுத்து போர் இடம்பெறும் பிரதேசத்திலும் கூட உயிர் காப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் போரியல் விதிகளுக்கு முரணானதே. அனைத்திற்கும் மேலாக சரணடையும் ஒருவரை கொலை செய்வது எந்தவொரு விதியிலும் அங்கீகரிக்கப்படாத ஒன்றே. அவரை இலகுவாக சிறைப்பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்த சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை செய்யாமல் மிகவும் மோசமான முறையில் ஐ.நா வின் விதிகளை மீறி நடந்து கொண்ட கிளர்ச்சிக்காரர்களின் செயலுக்கு, இவ்வளவு காலமும் கடாபியுடன் கூடி குலாவி நட்பு பாராட்டிகொண்டிருந்த உலக தலைவர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது நீதி உறங்கிவிட்டது என்பதையே உணர்த்தி நிற்கிறது. 
உலக நாடுகள் இன்று போரியல் விதிகளையும் தமது நாடுகளுக்கிடையேயான உறவுகளையும் சுய இலாப நோக்கில் கையாள்வது ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஆட்சி, அரசியல், அதிகாரம் போன்றவற்றில் நிச்சயமாக தளம்பல் நிலையை தோற்றுவிக்கும். இன்று மௌனம் காக்கும் எவரும் தமக்கும் இந்நிலை ஏற்படலாம் என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டிய தேவை உள்ளது. பல நிகழ்வுகளுக்கு நீதி உறங்குகின்ற போதும் காலம் பதில் கூற தவறுவதில்லை. இன்று நடந்துள்ள இந்த லிபிய புரட்சிகூட முடிந்துவிட்ட ஒன்று அல்ல. லிபியாவில் ஆட்சி அதிகார போட்டி அதை அனைவருக்கும் புரியவைக்கும். அதேபோல் இன்றைய இந்த கிளர்ச்சியின் முடிவுகள் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாடுகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான செயற்பாடுகளிலும் நிச்சயம் செல்வாக்கு செலுத்தும். இப்போது மௌனம் காக்கும் உலக நாடுகள், அமைப்புக்கள் எதற்கும் இனி வரும் காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளின் போதும் கருத்து வெளியிடும் அருகதை இருக்காது என்பதே உண்மை.
நீதி சில நேரங்களில் உறங்கிபோகலாம், ஆனால் சாவதில்லை. 

கேணல் கடாபியின் இறுதிக்கணங்கள் 




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Sunday, October 9, 2011

மீள் மாற்றம் (Remix Song) -10


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

இப்படி இங்கொரு
சீர்கேடு நடக்க
தன்னிடம் தடுக்க
வலிமை இன்றிதான்
இறைவனும் தூங்கிவிட்டான்

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

இப்படி இங்கொரு
சீர்கேடு நடக்க
தன்னிடம் தடுக்க
வலிமை இன்றிதான்
இறைவனும் தூங்கிவிட்டான்

எமது கனவுகள் சிதைந்த வாழ்வு
கண்ணின் முன்பு நடக்கும் போது
கனவு கலைந்து உள்ளம் வேகின்றதே

ஓஹோ... எமது விழிகள் அதனை பார்த்து
மனது உடைந்து கலங்கும் பொழுது
கனவு சிதைந்து மண்துகள் ஆகின்றதே

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

வாழ்வின் ஒளியை
தொலைத்து தொலைத்து
இருளில் நடந்து
இருளில் நடந்து
தவறுகள் செய்துவிட்டான்

தனது பெருமை
இழந்து இழந்து
இனத்தின் சந்தங்கள்
அழித்து அழித்து
இளமையை தொலைத்துவிட்டான்

ஒழுக்கம் என்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?
என்பதில் உனக்கு சந்தேகம் எதுக்கு?
ஒழுக்கம் என்பது நிச்சயம் பொதுப்பாலடா

ஏஹே... வாழ்க்கை என்பது அனுபவிப்பது
என்றொரு கருத்து உனக்கு தகாது
வாழ்க்கை என்பது நெறியின் வடிவமடா

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

மோகங்கள் பிடித்து
மோகங்கள் பிடித்து
கனவுகள் கலைத்து
கனவுகள் கலைத்து
பெண்ணவள் கற்பிழந்தாள்

கல்வியை விடுத்து
குடும்பத்தை மறந்து
மகிழ்வாய் நினைத்து
மஞ்சத்தில் இணைந்து
தன்னையே ஏன் கெடுத்தாள்?

வீட்டு உறவினை பேணி வளர்ப்பவள்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை கொடுப்பவள்
பெண்ணின் பிறப்புக்கும் அர்த்தம் கொடுப்பவளே

ஓஹோ... தாய்மை என்ற உறவை தந்திட
இரக்க குணங்கள் உணர்வை தந்திட
ஆக்கம் அழிவு ரெண்டும் பெண்ணவளே

பண்பாடு மறந்து
பண்பாடு மறந்து
கட்டினை அறுத்து
தறிகெட்டு நடந்து
தன்மானம் இழந்துவிட்டான்

மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்
மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்தது எண்ணித்தான்
பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஒஹோ… மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

நிலவின் ஒளியை
பிடித்து பிடித்து
பாலில் நனைத்து
பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

உலக மலர்கள்
பறித்து பறித்து
இரண்டு பந்துகள்
அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டான்

அழகு என்பது ஆண்பாலா? பெண்பாலா?
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா

ஏஹே… கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து
கண்களில் பதித்து
கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து
கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்?

காவித்துறவிக்கும் ஆசை வளர்த்தவள்
ஆலுக்கும் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஒஹோ….. தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம், மரணம் ரெண்டும் தருபவளே

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

Sunday, August 21, 2011

மீள் மாற்றம் (Remix Song) -9

Photobucket


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
 

புதிய வரிகள்.

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை

எனக்கும் வாழ்வு புரிந்திருக்கே 
அதை நான் எழுதி வைக்கட்டுமோ ஹோய்
எனக்கும் இதயம் வலித்திருக்கே
அதை யாருடன் பகிரட்டுமோ

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை


சில புதிர்கள் புரிந்திருந்தால்
பாதைகள் எல்லாம் தெரிந்திருக்கும்
என் நினைவில் அறிந்திருந்தால்
கனவுகள் கூட நிலைத்திருக்கும்
இரவு பொழுது வந்திருந்தால்
சூரியன் ஒன்றும் அழிவதில்லை
தெளிவுடனே நான் இருந்தும்
வாழ்கை இன்னும் தெளியவில்லை

தேடல்கள்கூட நடக்கும்
இந்த பாதையில் என்ன நடக்கும்?
தேடல் இருக்கும் வரைக்கும்
இந்த வாழ்க்கையும் கொஞ்சம் ருசிக்கும்
நினைவுகள் கனவென கலைந்த பின்னே
அது மறுபடி சேர்ந்திட நினைத்திடுமா?

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை


விதிவழிகள் கண் கட்டியே
பயணம் மெல்ல செல்கிறதே
என்வழிகள் சரியில்லையா?
இதயம் கொஞ்சம் கனக்கிறதே
என் வழியில் நான் நடந்தும்
எந்தன் கையில் எதுவும் இல்லை
மனதினிலே திடம் இருந்தும்
பிரிவுகள் தவிர்க்க முடிவதில்லை
இழப்புகள் உள்ளுக்குள் வலிக்கும்
அதை மறைத்து முகமோ சிரிக்கும்
காலம் அழைக்கும் வரைக்கும்
என் பயணம் தொடர்ந்து நடக்கும்
தினம் தினம் நினைவுகள் வதைக்கிறது
என் விழிகளில் நீரும் கசிகிறது

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை

எனக்கும் வாழ்வு புரிந்திருக்கே 
அதை நான் எழுதி வைக்கட்டுமோ ஹோய்
எனக்கும் இதயம் வலித்திருக்கே
அதை யாருடன் பகிரட்டுமோ 



மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம்

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

நீர் துளிகள் நிலம் விழுந்தால் 
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

வாம் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் 
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
 உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.