"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, January 4, 2011

சுமப்பவளே! என்னை சிதைக்காதே,



அம்மா, ஓ... அந்த உறவைத்தான் நீ விரும்பவில்லையே?
அந்த உரிமையை எனக்கு கொடுக்க நீ உடன்படவில்லையே?
நீதான் என்னை உன் வாரிசாகவே நினைக்கவில்லையே?
இருந்தாலும் நீ எனக்கு தாய்தானே?

என்னை சிதைக்கவேண்டுமென்று நீ "யாரோ ஒருவனிடம்" பேசியதை நான் கேட்டேன்,
என்னை அவமானச்சின்னமொன்று உருவாகிவிட்டது என்றாயே?
ஏதுமறியா நான் அவமானச்சின்னமா?
கட்டுப்பாடற்று உணர்வுகளில் தடம்புரண்ட நீ அவமானச்சின்னமில்லையா?
என்னை கொல்வதில் உன்னைவிட ஆர்வமாயுள்ள அந்த "யாரோ ஒருவன்" அவமானச்சின்னமில்லையா?

பிள்ளை வரம் இல்லாதவர்களை கேட்டுப்பார்...
அவர்களிற்குத்தான் தெரியும் மழலையின் அருமை...
என்னை ஏன் அவ்வளவிற்கு வெறுக்கிறாய்?
என்னை ஏன் கொல்ல நினைக்கிறாய்?
உன் கருவறையில் நான் வாடகைக்கா குடிவந்தேன்?
உன்னை பரிசுத்த ஆவி அசீர்வதித்தாலா நான் கருவானேன்?
தவறுதலாக நீ சூரியனை வேண்டி பிரார்த்தித்ததாலா நான் உருவானேன்?


உன் இசைவுக்கு முன் திருமணம் என்ற ஒன்றை ஏன் மறந்தாய்?
தொட்டு தழுவியபோது காந்தர்வ மணமென்று நினைத்தாயோ?
நீ சகுந்தலையுமில்லை, அவன் துஸ்யந்தனுமில்லை,
இது 21ஆம் நூற்றாண்டு, அதை ஏன் மறந்தாய்?


அவனுக்கு அது ஒரு சம்பவம், அன்றுடன் சரி.
உனக்கு அது ஆயுள் முழுவதும் வலி,
என்னை அழித்தால்கூட நினைக்கும்போதெல்லாம் உறுத்தும்,


உன் வயதொத்த  பெண்கள் உலகையே பிரமிக்க வைத்தார்களே, 
அது தெரியுமா?
உன்னத வேள்வியிலே உருகிப்போனார்களே,
அது தெரியுமா?
தாய்மையின் உணர்வு உனக்கு தெரியுமா? - அந்த
உணர்வின் புனிதம்  உனக்கு புரியுமா?
பெற்றோரை ஏன் மறந்தாய்?
உற்றாரை ஏன் மறந்தாய்?
உறவுகளை ஏன் மறந்தாய்?
உலகை ஏன் மறந்தாய்?
ஏன் உன்னையே நீ மறந்தாய்?


என்னை சுமப்பவளே,
உன்னிடம் ஒரு தயவான வேண்டுகோள்...
நானும் ஓர் உயிர்தான்,
என்னை சிதைக்காதே,
மழலையாய் பெற்றுவிடு,
பிள்ளைகள் இல்லாதேங்குவோருக்கு தத்து கொடுத்துவிடு...
என்ன பெயர் வந்தாலும் கொலைப்பாவமாவது உனக்கிருக்காது.  



   





This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment