"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Wednesday, January 12, 2011

நவீனத்துக்குள் தொலையும் வாழ்வு

ஆலோசனை கூறும் அளவிற்கு நான் பெரியவனில்லைத்தான், ஆனால் இதனை நான் இரவு தூங்கியபோது கனவில் கண்டு விடிந்தபின் எழுதவில்லை.  இவ்விடயங்களை பல நூறுபேரின் முகநூல் (facebook) பக்கங்களையும் பதிவேற்றங்களையும் பலநாட்களாக பார்த்து அவதானித்து  பதிந்தவற்றைக்கொண்டே எழுதுகிறேன். சிறிய கவனயீனமான செயல்களால் எதிர்காலமே பாழாகிறது. இதை ஆலோசனையாக எண்ணாமல் எனது கருத்தாக பாருங்கள். விரும்பினால் பின்பற்றுங்கள், உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப்பதிவினை பார்க்கும் உங்களில் சிலருக்காவது இதில் ஏதாவது பயன்பட்டால் அது போதும். அதுதான் நான் எதிர்பார்க்கும் விளைவுமாகும்.
*மகளிர் முகநூல் முகப்பு படத்தில் உங்கள் படத்தை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் தற்போது பலரும் தலைமாற்றி படங்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக செய்கிறார்கள். பற்றாக்குறைக்கு இச்சேவையை இலவசமாக வழங்கும் இணைய தளங்களும் உள்ளன.

*உங்கள் படங்களை உறவுகளுடன் முகநூலூடாக பரிமாற்றிக்கொள்ளும்போது அவர்கள் மட்டும் பார்க்கக்கூடியதாக Settingஐ மாற்றுங்கள். அதற்கான வசதிகள் முகநூலில் உள்ளன. 

*உங்கள் படங்களை தவறாக பயன்படுத்தநினைப்பவர்கள், நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரிலேயே ஒரு பக்கத்தை ஆரம்பித்து அதில் உங்கள் பக்கத்திலுள்ள அனைத்து தகவல்கள், படங்கள் போன்றவற்றை எடுத்து பதிந்து பதிவேற்றி உங்கள் நண்பர்களை இணைத்து உங்களைப்போலவே தகவல்களை பரிமாறி உங்கள் தகவல்களையும் அறிவதோடு உங்கள் உறவுகளின் தனிப்பட்ட தகவல்களையும் அறிந்துகொள்கிறார்கள். உங்களை தெரிந்தவர்களது, உறவுகளது பெயரில் இணைப்புக்காக வேண்டுகைகள் வரும்போது உரியவர்களிடம் பேசி அவர்களது வேண்டுகைதானா என்பதை உறுதிப்படுத்தியபின் இணைத்துக்கொள்ளுங்கள். 

*உங்கள் கணனிகள், மடிக்கனிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தும்போது இரவல் கொடுக்கும்போதும் திருத்தங்களிற்காக கொடுத்து மீள பெறும்போதும் கவனமாக இருக்க வேண்டும். Team viewer போன்ற  Soft ware உங்கள் PCஇல் install செய்யப்பட்டிருக்கலாம். அதனூடாக  வேறு எவரும் உங்க கணணியை கண்காணிக்க, உங்கள் செயற்பாடுகளை பார்க்கமுடியும். அதை Control Panelஇல் Add or Remove Programsஇல் போய் உறுதிப்படுத்தி  இப்படி எதாவது புதிய Soft ware உங்கள் PCஇல் install செய்யப்பட்டிருந்தால் அவற்றை  Removeபண்ணி விடுங்கள். இப்படி Net Cafe களிலும் நீங்கள் உங்களையறியாமலேயே கண்காணிக்கப்படலாம்.
 

*எவராக இருப்பினும் செல்லிடபேசி, டிஜிட்டல் புகைப்பட கருவிகளில் உங்களை நீங்களோ அல்லது மற்றவர்களோ 'அரைகுறையாக' படம் எடுக்காதீர்கள்/ எடுக்க அனுமதிக்காதீர்கள். அவை வெளியே வேகமாக பரவுவதுடன் இணையத்திலும் வலம் வரலாம். எடுத்து அழித்தபின்னும் Memory cardஇலிருந்து அவற்றை மீள எடுக்கக்கூடிய Softwareகள் பல உள்ளன.

*தற்போது ஆடைகள் கொள்வனவின்போது பலரும் விற்பனை நிலையத்திலுள்ள அறையிலேயே அவற்றை அணிந்து அளவு பார்க்கிறார்கள். அப்படியான அறைகளில் செல்லிடப்பேசி, CCTV, Bluetooth camera போன்றவற்றை மறைத்து வைத்து வீடியோக்களையும் படங்களையும் எடுக்கக்கூடும். சிறிய அளவில் தயாரிக்கப்படும் அவை இருப்பது வெளியே தெரியாமல் இருக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட பல காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன.

*அப்படியான இடங்களிலுள்ள முகம்பார்க்கும் கண்ணாடிகளிலும் அவதானம் தேவை. இப்போ ஒருபக்கம் முகம்பார்க்கும் கண்ணாடிபோலவும் மறுபக்கம் வெப்பத்தடுப்பு கண்ணாடி (Cooling glass) போலவும் செயற்படும் கண்ணாடிகளும் பொருத்தப்படுகின்றன.
 

*பொது இடங்களில், புதிய இடங்களில் உள்ள குளியலறை, கழிப்பறைகளை பயன்படுத்துப்போது மிகவும் அவதானம் வேண்டும். பல படங்கள் அங்குதான் எடுக்கப்படுகின்றன. தற்போது சுற்றுலாக்கள் அதிகரித்துள்ள நிலையில் புதிதாக தங்கும் விடுதிகளில் இவை இடம்பெறலாம். அதேபோல் அலுவலகங்கள், பாடசாலைகளிலும் நடக்கக்கூடும்.
 

*உங்கள் திருமணத்தின் முன் உங்கள் துணைவருடன் (அவர் நிச்சயிக்கப்பட்டவராகவே இருப்பினும்) தனியிடங்களுக்கு செல்வதை தவிர்த்திடுங்கள். அப்படி திட்டமிட்டு உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு தெரியாமலேயே படமாக்கப்படலாம். அண்மையில் இவ்வாறு செல்லிடப்பேசியை சூயிங்கத்தால் சுவரில் ஒட்டி வைத்து எடுத்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி தற்கொலைவரை போனதை பலர் அறிந்திருப்பீர்கள்.

*வீட்டைவிட்டு எங்கு வெளியே செல்வதாயினும் நேரத்தை சரியாக திட்டமிடுங்கள். வெளியிடங்களில் தாமதிக்காதவாறு நடந்துகொள்ளுங்கள். வீணான பிரச்சினைகள் பல இதனால் தடுக்கப்படும். இது கல்விநிலையங்களில் கற்பவர்களுக்கும் பொருந்தும்.
 

*இன்று பலரும் பலருடனும் உரையாட Web cameraவை பயன்படுத்துவது அதிகம். அதிலும் முகம் தெரியா நட்புகளுடன்கூட Skypeல் மணிக்கணக்கில்  உரையாடுகிறார்கள். இதன்போது உங்கள் உணர்ச்சிவசமான செயற்பாடுகள்  அந்த  பரால் பதியப்படலாம். பின் உங்கள் அசைவுகளிற்கேற்ப  Editing செய்து புத்திய வசனங்கள் இணைத்து படமாகவே ஓட வைத்துவிடுவார்கள். அப்படியும் சில காட்சிகள் உள்ளன.
இளமையிலேயே ஏன் கருகவேண்டும்?
கனவுகள் ஏன் சிதையவேண்டும்?
"அரிது, அரிது, மானிடராய் பிறத்தல் அரிது,
கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிதிலும் அரிது" என்பது சான்றோர் வாக்கு. அப்படியான வாழ்வை பெற்ற நாம் ஒழுக்கம் தவறி நடப்பதும் இழிவானதே. ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது. தவறி வாழ்வது பிணத்திற்கு நிகரானது. கணப்பொழுது இன்பங்களிற்காக வாழ்வையே இழந்து நிற்போர் பலர் உள்ளார்கள். மனதில் உறுத்தல் இருக்கும், ஆனால் வெளியே கூறமாட்டார்கள். அப்படியான ஒரு நரக வாழ்விலிருந்து தப்பி வாழ எமது அவதானமும் பொறுப்புர்வுமே கை கொடுக்கும். இளம் வயதிலேயே எதிகாலத்தை கேள்விக்குறியாகிவிட்டு எவரோ முகம்தெரியா மனிதர்களிற்கு பயந்து, மிரட்டல்களிற்கு பணிந்து, அவர்களது Black mailகளிற்கு கட்டுப்பட்டு வாழ்வதிலிருந்து விலகிநடப்போம். வளமான எதிர்காலத்தை  உருவாக்குவோம். 










This free script provided by
JavaScript Kit

4 comments:

  1. மிக்க நன்றி நல்ல அறிவுரை

    ReplyDelete
  2. அன்புடன் நன்றிகள்...

    ReplyDelete
  3. முக்கியமான அறிவுரை.. நன்றி..

    ReplyDelete