"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Wednesday, January 12, 2011

விடிந்தபோது எரிந்த தீயில் முடிந்து போனவன்...

உறவு தேடும் நினைவினோடு கடலில் வந்தவன்
உயர்ந்த தலைவன் முகத்தைக்கான விரைந்து வந்தவன்-விஜய்
அந்தப்படகில் கிட்டுவோடு வந்தவன்
விடிந்தபோது எரிந்த தீயில் முடிந்து போனவன்...

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
ஊர் திரும்பி வந்தன -கொடும் 
தீயில் எரிந்து வெந்தன
தாயகத்தை காணுகின்ற ஆசையோடு நின்றன
தாவுமலை மீதிலேறி வேகமோடு வந்தன
பேய் அரக்கர் வலையில் விழுந்து பேச்சிழந்து போயின
பேசவொரு வார்த்தையின்றி காவியமாய் ஆயின

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
நட்டநடு கடலினிலே தீயை அன்று மூட்டினார்
நம்பும் தமிழ் ஈழமென்று  சொல்லி துள்ளி பாடினார்
கிட்டு அண்ணனோடு விஜய் சேர்ந்து நின்று கூவினான்
இந்திய அரசு தலைகள் குனிய உயிரை தூக்கி வீசினான்

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்
தாயகத்து விழிகளிலே நீர் கசிந்து வழிந்தது
தலைவனது விழிகளிலோ தீ எழுந்து மூண்டது
வாய்கள் எல்லாம் சோகமுடன் பெயரைச்சொல்லி பாடின
வல்லரசின் கோரமுகம் ஊர், உலகம் அறிந்தன

உலகதிசைகள் முழுதும் திரிந்து சிறகுவிரித்த பறவைகள்
உயர உயர பறந்தபொழுதும் உறவை நினைத்த குருவிகள்

***************************************************************************
13ஆம் நாள் தொடக்கம் 19ஆம் நாள் வரையான ஒவ்வொரு கணங்களும்.....
உங்கள் சாவு உறுதியாகியும் நீங்கள் சுவாசித்த கணங்கள்,
உங்கள் உறவுகளை இறுதியாக நினைத்த கணங்கள்,
உங்கள் பிறந்த மண்ணை மனதில் எண்ணிய கணங்கள்,
வழிகாட்டியவர்களை மீட்டுப்பார்த்த கணங்கள்,
ஆம்...
விடுதலை சுமந்தவர்களை வித்துடல்களாகவும் நாம் சுமக்கவில்லையே.............?
கடலம்மா, எங்களுக்கு நீதிசொல்ல எவருமில்லையா...........?

This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment