"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Wednesday, January 19, 2011

என்னவள்


அவள் அழகானவள் - பேச்சில் 
அவள் அறிவானவள் - செயலில்
அவள் ஆற்றலுள்ளவள் - நிர்வாகத்தில் 
அவள் நம்பிக்கையற்றவள் - மந்திரங்களில் 
அவள் நம்பிக்கையுள்ளவள் - இறைவனில்
அவள் விருப்புள்ளவள் - எதிர்காலத்தில்
அவள் வெறுப்புள்ளவள் - ஆடம்பரத்தில்
அவள் சேமிப்பவள் - வருவாயில்
அவள் இறுக்கமானவள் - செலவீனத்தில்
அவள் பணிவானவள் - குடும்பத்தில்
அவள் பண்பானவள் - பழக்கத்தில்
அவள் அன்பானவள் - அணைப்பில்
அவள் நேர்மையானவள் - நடத்தையில்
அவள் இனிமையானவள் - பார்வையில் 
அவள் தூய்மையானவள் - மனதில்
அவள் ஒழுங்கானவள் - கடமையில்
அவள் முதிர்ந்தவள் - பண்பில்
அவள் அன்னையானவள் - ஆறுதலில்
அவள் அனைதுமானவள் - உறவில்
அவள் விரைவானவள் - புரிதலில்
அவள் மெதுவானவள் - கண்டிப்பில்
அவள் உயர்ந்தவள் - ஒழுக்கத்தில்
அவள் தாழ்ந்தவள் - அடக்கத்தில்
அவள் இடம்பிடித்தவள் - இதயத்தில்
அவள் ஒதுங்கிவிடுபவள் - விமர்சனங்களில்
அவள் மென்மையானவள் - உள்ளத்தில்
அவள் கடினமானவள் - உறுதியில்
அவள் விருப்புபவள் - சத்தியத்தில்
அவள் வெறுப்பவள் - ஆடம்பரத்தில்
அவள் விட்டுக்கொடுப்பவள் - வாதத்தில்
அவள் தாங்குபவள் - பின்னடைவுகளில் 
அவள் பொறுமையுள்ளவள் - ஏமாற்றங்களில்
அவள் ஆசையில்லாதவள் - சொத்துகளில்
அவள் பாத்திரமானவள் - நம்பிக்கையில்
அவள் தூரநோக்குள்ளவள் - வாழ்வில்
அவள் இரசனையுள்ளவள் - இயற்கையில்
அவள் சக்தியுள்ளவள் - துன்பங்களில்
அவள் ஆழமானவள் - சிந்தனையில்
அவள் மென்மையானவள் - புன்னகையில்
அவள் அவதானமானவள் - பக்குவத்தில்
அவள் தளர்வானவள் - அதிகாரத்தில்
அவள் பிடிப்புள்ளவள் - சுதந்திரத்தில்
அவள் மதிப்புள்ளவள் - மாண்டவர்களில்
அவள் ஆராதிப்பவள் - உணர்வில்
அவள் ஒளிவீசுபவள் - அறிவில்
அவள் துனிவானவள் - ஆபத்தில் 
அவள் உறுதியுள்ளவள் - கொள்கைகளில் 
அவள் பூரணமானவள் - கற்பில்
அவள் பிரமிப்பானவள் - சேலையில்
அவள் பற்றுள்ளவள்  - தமிழில்
அவள் நேசிப்பவள் - பண்பாட்டில்
அவள் வாழ்பவள் - எளிமையில்
அவள் வாழாதவள் - தற்பெருமையில்
அவள் பிரகாசமானவள் - முகத்தில்
அவள் துவண்டுவிடாதவள் - தோல்விகளில்
அவள் இரக்கமானவள் - ஏழைகளில்
அவள் இனிமையானவள் - நினைவுகளில்
அவள் காத்திருப்பவள் - தடைகளில்
அவள் துடிப்பானவள் - பணிகளில்
அவள் நிறைவானவள் - மனதில்

இத்தனைக்கும் அவள்  முகம் தெரியாதவள்...
                             நிஜத்தில் நான் காணாதவள்...
                             கற்பனையில் வாழ்பவள்...
                             கற்பனைகள் கனவாகவே போகலாம், 
                             நிஜமாகவும் மாறலாம்...


எதுவும் என்கையில் இல்லாததால் இப்போதே எழுதிவிட்டேன் கற்பனையில் வாழும் என்னவளின் இயல்புகளை.





This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment